இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாசை இழந்து பேட்டிங் செய்ய ஆலி போப்பால் பணிக்கப்பட்டிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற சமனில் முடிக்க முடியும்.
இல்லையென்றால் இங்கிலாந்து அணி தொடரை வென்றது மட்டுமில்லாமல் ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால் இந்தியா பும்ராவை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கருண் நாயர் வந்தது ஏன்?
ஏனென்றால் ஆடுகளத்தில் வெறும் மூன்று ஃபாஸ்ட் பவுலர்களை தான் இந்தியா பயன்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரன்களை முதல் இரு போட்டியில் வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணாவை இந்தியா மீண்டும் சேர்த்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சர்துல் தாக்கூருக்கு பதில் கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார்.
அணியில் ஏற்கனவே ஆகாஷ் தீப் சிங் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், தற்போது கம்பீர் இந்த முடிவு எடுத்திருப்பது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் கூடுதலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டதற்கு பேட்டிங் பலமாக இருக்க வேண்டும் என்ற முடிவை கம்பீர் எடுத்திருப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா ஏன்?
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “தற்போது இந்த ஆட்டத்தில் பண்ட் இல்லை. இதனால் நடு வரிசையில் இந்திய அணி பேட்டிங் பலவீனமாக காட்சி அளிக்கின்றது. இதன் காரணமாகத்தான் கூடுதல் பேட்ஸ்மேனை அணியில் கம்பீர் சேர்த்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணா சேர்க்கப்பட்டது குறித்து பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்து நினைக்கிறத இந்திய அணி செய்யனுமா?.. ஸ்டோக்ஸ் தப்பிக்கவே முடியாது – ஆஸி ஹேடின் பேச்சு
பேட்டிங்கை பலப்படுத்தலாம் என்ற முடிவை ஓரளவு வரவேற்கலாம். ஆனால் பலமான பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் 10 ரன்களில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.






