இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தை இங்கிலாந்து அணி அமைத்தது.இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்ய இங்கிலாந்து யோசித்து வருகிறது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதற்கு தகுந்தார் போல் சில மாற்றங்களை செய்யப்போகிறது.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்க கூடும் என்பதால் பயிற்சியாளர் கம்பீர் இந்திய அணி பேட்டிங் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க போகிறார். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு சாய் சுதர்சனை சேர்க்க கம்பீர் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்த நிலையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்ப இருக்கின்றார். பும்ரா திரும்பினால் யார் வெளியே அமர்வார் என்ற கேள்விக்கு பிரசித் கிருஷ்ணா தான் பதிலாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய சிராஜ் 70 ஓவர்கள் மேல் பந்து வீசி இருக்கின்றார். இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு வெறும் மூன்று நாள் தான் இடைவேளை என்பதால் சிராஜ்க்கு ஓய்வு வழங்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.
ஒரு வேலை சிராஜுக்கு ஓய்வு வழங்கப்பட்டால், அவருக்கு பதில் ஆர்ஸ்தீப் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோடாக், பந்துவீச்சாளுக்கான பணிச்சுமை நிர்வகிப்பது என்பது பும்ராவுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் தான். எனினும் தனிப்பட்ட வீரரின் முடிவை வைத்தே ஓய்வு வழங்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: கோலி கூட கம்பேர் பண்ண.. சுப்மான் கில் இந்த பிரச்சினையை சந்திக்கணும்.. இது வெறும் ஆரம்பம்.. இங்கி பவுலர் பேட்டி
இந்தியா பிளேயிங் லெவன் உத்தேசம்: 1, ஜெய்ஸ்வால் 2, ராகுல் 3,கருண் நாயர், 4. சுப்மன் கில் 5,ரிஷப் பண்ட் 6, சாய் சுதர்சன் 7. ஜடேஜா 8. நிதிஷ் குமார். 9, சிராஜ்/ ஆர்ஸ்தீப் சிங், 10. பும்ரா, 11. ஆகாஷ்தீப்