இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய சுழற் பந்துவீச்சாளர் அடில் ரசீத் தற்போதைய இந்திய அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
வெற்றிப் பாதையில் இந்திய அணி
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சுப்மான் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடி இரண்டாவது போட்டியின் மூலமாக வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கின்றனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கில் கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கும் இந்திய அணி குறித்து இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர் அடில் ரஷீத் விராட் கோலி குறித்தும் தற்போதைய கேப்டன் கில் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து பேசி இருக்கிறார்.
மக்களிடம் மரியாதை பெற்றார்
இதுகுறித்து அவர் கூறும்போது “தற்போதைய இந்திய அணியில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் அல்லது தோல்வி அடைகிறார்கள் என்பதை பொறுத்து அவர்களது செயல் திறனில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். கில் குறித்து கூற வேண்டுமென்றால், இது ஆரம்பம்தான். மேலும் அவர் தோல்வியடையும் போது எப்படி மாற்றங்களை மேற்கொள்கிறார் மற்றும் எப்படி கையாள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விராட் கோலியை பொறுத்தவரை வெற்றி தோல்வி என இரண்டிலும் அவர் காட்டும் ஆக்ரோஷம் உக்கிரமானது.
இதையும் படிங்க:தோனியிடம் உங்களுக்கு பிடித்த விசயம் என்ன? மனம் திறந்த விராட் கோலி, ரோகித், ஜாஸ் பட்லர்
விராட் கோலி எப்போதுமே இப்படித்தான் அவர் அணியில் இருந்து சிறந்தவற்றை வெளியே எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் கில் கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கோலி அனைவரிடமிருந்தும் மரியாதை பெற்றார். அதுமட்டுமல்லாமல் களத்தில் அனைவரும் சண்டையிட வேண்டும் என்று தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது தலைமை பொறுப்பில் இந்திய அணி உண்மையிலேயே சிறந்து விளங்கியது” என்று அவர் பேசியிருக்கிறார்.






