பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து.. இந்திய அணியை வீழ்த்த 2 அதிரடி மாற்றங்கள்

0
298
England

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடக்கிறது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான முறையில் இங்கிலாந்து வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் இல்லாத அனுபவமற்ற இந்திய அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி, எப்படியாவது தொடரை வென்று விடுவதற்கு இங்கிலாந்து கடுமையாக முயற்சி செய்கிறது.

மேலும் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியை விட சமயோசிதமாக யோசித்து ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் அணிக்குள் கொண்டு வந்து இங்கிலாந்து சிறப்பாக திட்டமிட்டு இருந்தது. இந்த திட்டத்திற்காக சாதனை பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனையை கழட்டிவிட்டது.

மேலும் போட்டி துவங்குவதற்கு முதல் நாள் முன்பாகவே இங்கிலாந்து தம்முடைய பிளேயிங் லெவனை வெளியிட்டு அதிரடி காட்டியது. இந்த முறையும் அதேபோல் ஒரு நாளுக்கு முன்பாகவே பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில், முதல் போட்டி பிளேயிங் லெவனில் இருந்து இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

முழங்காலில் காயமடைந்திருக்கும் சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச்சுக்கு பதிலாக, இளம் சுழற் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் அறிமுகம் செய்யப்படுகிறார்.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனை ஒதுக்கி வைத்து மார்க் வுட்டை தேர்வு செய்து இருந்தார்கள். தற்பொழுது இந்தத் தவறை திருத்தி ஆண்டர்சனை பிளேயிங் லெவனில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து மிகத் தைரியமாக மீண்டும் ஜோ ரூட் உடன் சேர்த்து நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் என களம் இறங்குகிறது. இந்தியாவும் இதே போல ஒரு முடிவை எடுக்குமா? என இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் :

ஸாக் கிரவுலி
பென் டக்கெட்
ஒல்லி போப்
ஜோ ரூட்
ஜானி பேர்ஸ்டோவ்
பென் ஸ்டோக்ஸ் (கே)
பென் ஃபோக்ஸ்
ரெஹான் அகமது
டாம் ஹார்ட்லி
ஷோயிப் பஷீர்
ஜேம்ஸ் ஆண்டர்சன்