ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து 2 டக் ஆன விராட் கோலியின் ஓய்வு குறித்த வெளியான ஊகங்களை முகமது கையிப் மறுத்துள்ளார். கோலி கையை அசைத்தது, ரசிகர்களின் கைதட்டலுக்கு பதிலளிப்பதாகவும், அவர் மீண்டும் அடிலெய்டு ஓவலில் விளையாடுவது சாத்தியமில்லை என்றும் கைஃப் கூறினார்.
இது குறித்து பேசிய கையிப், “இல்லை, விராட் கோலி ஓய்வு அறிவிக்க மாட்டார். அவர் மீண்டும் அடிலெய்டில் விளையாடுவது சாத்தியமில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அடிக்கடி வருவதில்லை. மேலும் அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. அவர் அடுத்த டி20 தொடரில் இந்திய அணியில் இல்லை.”
“அடிலெய்டு அவருக்கு பிடித்த மைதானங்களில் ஒன்று, அங்கு அவர் தனது பெயரை உருவாக்கினார். பூஜ்ஜியம் எடுத்த பிறகும், ரசிகர்கள் அவருக்கு கைதட்டினர். ஏனெனில் விராட் கோலி அப்படிப்பட்ட உயர்ந்த வீரர். அவர் ரசிகர்களுக்கு நிறைய மகிழ்ச்சியை அளித்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு எப்போதும் கோலி முன்மாதிரியாக இருப்பார் என்று கூறினர்.
“கோலி ரசிகர்களின் ஆதரவை கைதூக்கி ஏற்றுக்கொண்டார். அவர் எங்கும் செல்லவில்லை. செல்லவும் கூடாது. இரண்டு பூஜ்ஜியங்கள் எடுத்தது பெரிய விஷயமில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி செய்தவற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் முன்னோக்கி விளையாடுவார். சிட்னி போட்டி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர், பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் உள்ளது.”
“அணியில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஷுப்மன் கில் கேப்டனாகியுள்ளார். ரோஹித் ஷர்மா அந்த பொறுப்பில் இல்லை. டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு விளையாடுவது கோலிக்கு வித்தியாசமாக இருக்கலாம். மூன்று ஒருநாள் போட்டிகள் இதற்கு போதுமானவை இல்லை. சிட்னியில் அவர் ஆட்டமிழந்தாலும், அது பரவாயில்லை.”
“அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவார். நியூசிலாந்து தொடர் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் 2027இல் உலகக் கோப்பை உள்ளது. அவருக்கு 8-10 போட்டிகள் விளையாட அனுமதிக்க வேண்டும். பின்னர் அவரது எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டும்.நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் உள்ளது, பின்னர் நியூசிலாந்து. எனவே, அவசரப்பட வேண்டிய அவசியமில்லை.”
இதையும் படிங்க: 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்லும்.. 2 முறை டக் அவுட்டானாலும், கோலி மீது நம்பிக்கை இழக்காத கிளார்க்
” சமூக ஊடகங்களில் அவரை ஓய்வு அறிவிக்க சொல்பவர்கள் காத்திருக்க வேண்டும்.ஏனெனில் ஒருமுறை சொன்னவற்றை திரும்பப் பெற முடியாது. பேசுவதற்கு முன் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய வீரர்கள் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழப்பது இல்லை என்று பேசுகிறார்கள். கோலி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்ததில்லை. அவர் எப்போதும் அடிலெய்டில் நன்றாக விளையாடியுள்ளார். அவர் கடைசியாக அடிலெய்டில் ஒரு சதம் அடித்தார், பெர்த்தில் டெஸ்ட் சதம் அடித்தார். இதுபோன்றவை நடக்கும், இது விளையாட்டின் ஒரு பகுதி. எனவே, விரைவாக தீர்ப்பு வழங்கக் கூடாது.” என்று கையிப் கூறினார்.