கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கம்.. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் டிவிஸ்ட்

0
231

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.  2025 சாம்பியன்ஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணியில் இடம்பெறும் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

50 ஓவர் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.  ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவியில் ஏற்றுக்கொண்டுள்ளார்.  ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் புதிய துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பையை கட்டமைக்கும் பணியில் தேர்வுக்குழு இந்த தொடர் மூலம் தொடங்கியுள்ளது.

- Advertisement -

முக்கிய வீரர்கள் இல்லை:

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பை 2025 இல் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடது  காயம் காரணமாக அவர் பங்கேற்க முடியவில்லை.

அவருக்கு பதிலாக, நிதிஷ் குமார் ரெட்டி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரம் ஷிவம் துபே இடம்பெறவில்லை.இந்தியாவின் கடைசி ஒருநாள் தொடர்களில் மாற்று விக்கெட்-கீப்பராக இருந்த ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவு காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

அவர் தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான  டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, கே.எல்.ராகுலுக்கு மாற்று விக்கெட்-கீப்பராக துருவ் ஜுரேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய அணியில் ஒரே முன்னணி சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

பும்ராவுக்கு ஓய்வு:

மேலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.  அதேநேரம் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை. முகமது சிராஜ் ஆர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அணி செஞ்சது வருத்தமா இருக்கு.. கிரிக்கெட்டில் இது இருக்கவே கூடாது – ஏபி டிவில்லியர்ஸ் விமர்சனம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணிஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), அக்ஷர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட்-கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஆர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, த்ருவ் ஜுரேல் (விக்கெட்-கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.பெர்த், அடிலெய்டு, மற்றும் சிட்னி ஆகிய இடங்கள் முறையே அக்டோபர் 19, அக்டோபர் 23, மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளனர்.

- Advertisement -