இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் அண்டர் ரேட்டடான கேப்டன் என்றால், அது ரோஹித் சர்மா தான் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார். சிட்னியில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் ரோஹித் அபாரமான சதம் விளாசி நிலையில், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
ரோஹித் 125 பந்துகளில் 121 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை தண்டித்தார். இது இந்தியாவுக்கு 9 விக்கெட் வித்தியாச வெற்றியைத் தேடித்தந்தது. சிட்னி ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகனாகவும், தொடரில் சிறந்த வீரராகவும் ரோஹித் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
ரோஹித் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான வெள்ளைப் பந்து கேப்டன்களில் ஒருவர் ஆக இருந்தார். 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரு ஐசிசி பட்டங்களையும் இந்தியாவுக்கு வென்றுதந்துள்ளார். இது குறித்து பேசிய கிளார்க், “இரு வீரர்களும் ஆஸ்திரேலிய மண்ணை விட்டு வெளியேறும் விதம் அற்புதம்.”
வரலாற்றில் இடம் பிடிப்பார்:
“ரோஹித் விளையாடும் முறையை நான் எப்போதும் விரும்புவேன். ஆஸ்திரேலிய மைதானங்களில் அவர் மிகச் சிறந்த வீரர். இது இந்தியாவுக்கு முற்றிலும் எதிரானது. அவரது கேப்டன்சி குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தியாவுக்கு அவர் மிகச் சிறந்த கேப்டன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவர். அந்த வரலாற்றில் அவர் நிச்சயம் இடம்பிடிப்பார்.”
“விராட் மீண்டும், நான் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர். அவர் தனது அணிக்கு வென்றெடுத்த போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை. சிட்னியில் பேட்டிங் நிலைமைகள் மிகச் சிறப்பாக இருந்தன. குறிப்பாக இரண்டாவதாக பேட் செய்தபோது. முந்தைய இரு போட்டிகளில் டாஸ் தோல்வியடைந்து முதலில் பேட் செய்ய வேண்டியிருந்தது.”
நான் பந்தயம் கட்டுவேன்:
“போட்டிக்குப் பின் சுப்மன் கில் சரியாகக் கூறினார். ரோஹித் மற்றும் விராட் அணியில் இருப்பதை அவர் ரசிக்கிறார். மைதானத்தில் தேவைப்பட்டால் அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். சுப்மன் கில்லின் நிலையில் இதுவே வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே கேட்க வேண்டும், ஆனால் ஆலோசனை தேவைப்பட்டால் அவர்கள் இருக்கிறார்கள். இது அவருக்கு உதவும்” என்று கிளார்க் கூறினார்.
இதையும் படிங்க: இப்பவே சொல்றேன்.. ஆஸ்திரேலியாவிலும் அதே பிளான்தான்.. இனி இப்படித்தான் டீம் இருக்கும் – சூரியகுமார் யாதவ் பேட்டி
“அவர்கள் இன்னும் ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தால், அடுத்த உலகக் கோப்பை இருவருக்கும் யதார்த்தமானது. உலகக் கோப்பை என்பது அதிகபட்ச அழுத்தம் கொண்டது. அவர்கள் வெல்வது எப்படி எனத் தெரியும். அழுத்த சூழல்களை கையாள மூத்த வீரர்கள் தேவை. அவர்கள் ரன் ஏதும் எடுக்காவிட்டாலும் அரையிறுதி வரை தகுதி பெற்றால், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அதிக ரன் குவிப்பவர்களாக அவர்களை நான் பந்தயம் கட்டுவேன்,” என்று கிளார்க் தெரிவித்தார். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் கோலி மற்றும் ரோஹித் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.






