இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ள இந்திய அணி, அதற்கான பயணத்தை தொடர உள்ளது.
குறிப்பாக சமீபத்தில் நடந்த 2025 ஆசிய கோப்பையில் தோல்வியடையாத இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த, தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். தேர்வுக் குழு ஆசிய கோப்பை வென்ற மைய அணியை பெரும்பாலும் தக்க வைத்திருந்தாலும், இந்திய அணி தேர்வு மற்றும் பிற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வித்தியாசமான ஆஸி ஆடுகளம்:
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், அக்டோபர் 29, புதன்கிழமை கான்பராவில் முதல் டி20 போட்டியுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025 முதல் டி20 போட்டிக்கு முன் இந்திய அணி எதிர்கொள்ள வேண்டிய கேள்விகளை குறித்து பார்க்கலாம். இதில், முக்கிய கேள்வி. குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்கரவர்த்தி, அல்லது இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெறனுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணி, அக்சர் படேல், குல்தீப் யாதவ், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவருடன் 12 ஓவர்கள் சுழற்பந்து வீச்சை வீச முடியும். இந்த மூவர் கூட்டணி, குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தின் ஆடுகளங்களில், எந்தவித தயக்கமும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி ஒரே ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளருடன் ஆடியது.
யாரை சேர்ப்பது குழப்பம்:
ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இது நிச்சயமாக சாத்தியம் அல்ல. எனவே, ஒரு முன்னணி சுழற்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியிருக்கும். இது ஒரு கடினமான முடிவுக்கு வழிவகுக்கிறது.ஒரு புறம், உலகின் நம்பர் 1 டி20 பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் உள்ளார்.மறுபுறம், திறமையான சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி உள்ளார். இதே போன்று, இந்திய அணி, அக்சர் படேலும் இருக்கிறார். இதனால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அகர்கர் கம்பீர் என்னை மாதிரி ஒரு ஆளை விட்டு இருக்க கூடாது.. அப்ப ஆசையா காத்திருந்தேன் – ரகானே வருத்தம்
வருண் சக்கரவர்த்தியுடன், பவர்பிளேயில் பயன்படுத்துவதன் மூலம், ஆஸ்திரேலிய அதிரடியை கட்டுப்படுத்த முடியும். குல்தீப் ஒரு உண்மையான விக்கெட் எடுக்கும் வீரராகவும், ஆஸ்திரேலியாவில் டி20 போட்டிகளில் சிறந்த ரெக்கார்ட் கொண்டவராகவும் உள்ளார்.ஹர்ஷித் ராணாவை 8 இடத்தில் நம்பி, இரண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்குடன் செல்ல வேண்டுமெனில், இரு சுழற்பந்து வீச்சாளர்களையும் சேர்க்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த விருப்பம் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம், ஏனெனில் பும்ரா, ராணா, மற்றும் ஒரு வேக ஆல்-ரவுண்டர் என்ற மூவர் கூட்டணி, இரு சுழற்பந்து வீச்சாளர்களை உள்ளடக்குவதற்கு பொருத்தமாக இருக்காது. இதனால் குழப்பம் நிகழ்கிறது.






