ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, அணி நிர்வாகத்தை முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார். பெர்த்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
கேஎல் ராகுலுக்கு முன்பாக அக்ஸர் படேலை பேட்டிங் ஆர்டரில் அனுப்பிய முடிவை அவர் கடுமையாகச் சாடினார். டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டது. மழை காரணமாக போட்டி 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணி 136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.
எல் ராகுல் ஆறாவது இடத்தில் பேட்டிங்கிற்கு வந்தார்.
அணியின் முடிவு அபத்தம்:
அவர் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், “நான் முன்பே சொன்னேன். கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்னால் ஆட வேண்டும் என்று. அணியும் நிர்வாகமும் எடுத்த முடிவு முற்றிலும் அபத்தமானது.”
“அவரை விட்டுவிட்டு வேறு இடத்தில் பார்க்கிறார்கள். அவர் ஸ்கோர் செய்தால், அதிக ரன்கள் எடுப்பார். அக்ஸர் படேலை கே.
எல் ராகுலுக்கு முன்னால் அனுப்பியது முற்றிலும் தவறு.அக்ஸர் நன்றாக ஆடினாரா இல்லையா என்பது விஷயமல்ல. உங்கள் அணியில் மிகச் சிறந்த மற்றும் நாகரிகமான வீரர் ஒருவர் இருக்கிறார்.”
மற்றொரு தவறு:
” கேஎல் ராகுல் ஐந்தாவது இடத்தில் வந்திருக்க வேண்டும். நான் கேப்டனாக இருந்திருந்தால், அவரை நான்காவது இடத்தில்அனுப்பியிருப்பேன்.ஆஸ்திரேலியாவில் உள்ள நிலைமைகள் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வேறுபட்டவை. அவர் அதிகபட்ச பந்துகளை ஆட வேண்டும். 160 ரன்கள் வரை எடுத்து, அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால், DLS முறையில் ஸ்கோர் அதிகமாக இருந்திருக்கும்.”
இதையும் படிங்க: பயிற்சியாளருக்கும், கில் நியமனத்திற்கும் தொடர்பில்லை.. சஞ்சய் பங்கர் விளக்கம்
” இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். மழை உண்மையில் இந்தியாவைக் காப்பாற்றியது.மற்றொரு தவறு என்னவென்றால், ராகுல் மற்றும் அக்ஸர் அவுட்டான பிறகு நிதிஷை அனுப்பவில்லை. அவரை பெரிய ஹிட்டராக அணியில் எடுத்திருந்தால், முன்னால் அனுப்ப வேண்டும். இடது-வலது காம்பினேஷனைப் பின்பற்ற வேண்டாம்” என்று ஸ்ரீகாந்த் கூறினார்.






