ஆஸ்திரேலியா மீடியாக்களுக்கு சரியான பதிலடி; பவுலிங் செய்யும்போது, ஜடேஜா கையில் தடவியது என்ன? – பிசிசிஐ கொடுத்த விளக்கம்!

0
7026

பவுலிங் செய்யும்போது ஜடேஜா தனது கையில் என்ன தடவினார் என்று ஆஸ்திரேலியா மீடியாக்கள் கிளப்பிய சர்ச்சைக்கு பிசிசிஐ தெளிவுபடுத்தியது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ஆடிவரும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

ஸ்மித் 37 ரன்கள் மார்னஸ், லபுஜானே 49 ரன்கள், அலெக்ஸ் கேரி 36 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்சில் 77 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்டுகள், அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீசினார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஜடேஜா பந்துவீசி வந்தார். அந்த சமயம் சிராஜிடம் பசை போன்ற ஒன்றை பெற்றுக்கொண்ட ஜடேஜா, தனது பந்துவீசும் விரல் முழுவதும் பூசிக்கொண்டார்.

இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகளை எடுத்துக்கொண்டு சமூகம் வலைதளங்களில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் பதிவிட்டனர். இந்த விவகாரத்தைப் பிடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா மீடியாக்கள், “ஜடேஜா பந்தை சேதப்படுத்துகிறார். இதனால் தான் எளிதாக விக்கெட்டுகளை எடுக்கிறார்.” என்று ஊதி பூதாகரமாக்கியது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், “ஜடேஜா தனது கையில் என்ன பூசுகிறார்? இது போன்ற ஒன்றை நான் இதுவரை பார்த்ததே இல்லை..!” என்று மேலும் சர்ச்சையை கிளப்பினார்.

இவர்கள் ஒருபுறம் இருக்க, மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வர்ணனை செய்து கொண்டிருக்கும் பொழுது, “ஜடேஜா நிறைய ஓவர்கள் வீசியுள்ளார். ஆகையால் அவரது விரல்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அதற்காக அவர் மருந்து பூசுகிறார் என்று தெரிகிறது. இதை களத்தில் இருந்த நடுவரிடம் பந்தை கொடுத்துவிட்டு, அவர் முன்னிலையில் பூசி இருந்தால் சர்ச்சைகள் எழுந்திருக்காது. கையில் பந்தை வைத்துக்கொண்டு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.” என்று தெளிவாகப் பேசினார்.

இப்படி மாறி மாறி எழுந்து வரும் சர்ச்சைகளுக்கு பிசிசிஐ தெளிவான விளக்கம் கொடுத்து, ஆஸ்திரேலியா மீடியாக்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்திருக்கிறது. அதாவது, பந்தை பிடித்து நிறைய ஓவர்கள் வீசியதால் ஜடேஜாவின் கையில் அதிக அளவில் எரிச்சல் ஏற்பட்டுவிட்டது. அந்த எரிச்சல் நிற்பதற்காக இந்திய அணி நிர்வாகத்தின் மருத்துவர் கொடுத்த மருந்தை ஜடேஜா தனது கையில் பூசிக் கொண்டார் என்று பிசிசிஐ போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் இடம் தெளிவுபடுத்தியது.

இதை ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் கிளப்பிய சர்ச்சை இது என்று தெளிவாக தெரிந்துவிட்டது.