தற்போது இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதி பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் திடீர் முடிவால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் சுழல் பந்துவீச்சாளராக மாறிய அரிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளை தோற்று தொடரையும் இழந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெறுகிறது.
வேகப்பந்துவீச்சாளர் டு சுழல் பந்துவீச்சாளர்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இரண்டாவது நாளில் 325 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு கேப்டன் ஒல்லி போப் அதிகபட்சமாக 154 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 86 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் மிலன் ரத்னாயகே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் திமுத் கருணரத்னே ரன் அவுட் ஆகி வெளியேறினார். அந்த ஓவரை வேகப்பந்து வைத்தாளர் கிறிஸ் வோக்ஸ் வீசினார். இதைத்தொடர்ந்து ஓவரை வீச முற்படும் பொழுது வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நடுவர்கள் போட்டியை நிறுத்தினார்கள். இதன் காரணமாக வேகப்பந்துவீச்சாளராக இருந்த கிறிஸ் வோக்ஸ் சுழல் பந்துவீச்சாளராக மாறினார். இதற்குப் பிறகு வெளிச்சம் வர மீண்டும் போட்டி பழையபடி நடைபெற்றது.
கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?
இதுகுறித்த 2.7.1 கிரிக்கெட் விதி நிலம், வானிலை, வெளிச்சம் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகள் மற்றும் ஆபத்தான நிலைகள் என்று நடுவர்களே முடிவு செய்ய வேண்டும். அவர்களே போட்டியை தொடர்ந்து நடத்துவது குறித்தும் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
இந்த நிலையில் நடுவர்கள் அப்பொழுது வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தினால் எதிரணிக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்தார்கள். ஒன்று மீண்டும் வெளிச்சம் கிடைக்கும் வரை வெளியே செல்லலாம். இல்லையென்றால் வேகப் பந்துவீச்சுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சு வீசலாம் என்று கூறினார்கள். இதன் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் களத்தை விட்டு வெளியேற விரும்பாமல் கிறிஸ் வோக்சை சுழல்பந்து வீச வைத்தார். அடுத்து உடனே இளமை சரியாக மீண்டும் வழக்கம் போல் ஆட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க : ரோகித் இல்லை.. நவீன கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் ஓபனர் இவர்தான் – நாசர் ஹுசைன் விளக்கம்
இந்த தொடரில் வெளிச்சம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. நடுவர்கள் இதில் கடுமையாக நடந்து கொள்வதாக ஏற்கனவே மைக்கேல் வாகன் கூறியிருந்தார். மேலும் இன்றைய போட்டியில் நடந்த விஷயம் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்சை அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் பெவிலியனில் இதை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
STOP WHAT YOU'RE DOING! ⚠️
— England Cricket (@englandcricket) September 7, 2024
Bad light means Chris Woakes is bowling spin 😆 pic.twitter.com/TPYSnwXiEN