ரோகித் இல்லை.. நவீன கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் ஓபனர் இவர்தான் – நாசர் ஹுசைன் விளக்கம்

0
496

இந்திய கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா டெஸ்ட், ஒரு நாள், டி20 என எதிலும் பாரபட்சம் காட்டாமல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே மாதிரியான அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்.

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவை விட டெஸ்டில் சிறந்த ஓபனர் இவர்தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசேன் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 59 போட்டிகளில் 101 இன்னிங்ஸ்கள் விளையாடி 4137 ரன்களை குவித்திருக்கிறார். இதில் 12 சதங்களும் 17 அரை சதங்களும் அடங்கும். பேட்டிங் ஆவரேஜ் 45 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 57.05 ஆகவும் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 212 ரன்கள் விளாசி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசைன் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் பென் டக்கெட்டை நவீன கிரிக்கெட்டில் டெஸ்டில் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கிறார். இலங்கை அணியின் பந்து வீச்சு சுமாராக உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அவர், இருப்பினும் எந்த பந்துவீச்சாளரையும் டக்கட் செட்டிலாக விடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும் போது “நேர்மையாக கூற வேண்டும் என்றால் இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் சுமாராக இருந்தது. அவர்கள் இடது- வலது காம்பினேஷனில் பந்து வீசாதது பிரச்சினையாக இருந்தது. ஆனால் அவர்களை டக்கட் எந்த நேரத்திலும் செட்டில் ஆக விடவில்லை. அவர்கள் தொடக்கத்திலேயே பந்துகளை கால்களை நோக்கி வீச ஆரம்பித்தார்கள். இல்லையென்றால் லைனுக்கு வெளியே பேடுகளில் வீச ஆரம்பித்தார்கள்.

பின்னர் அதனை சரி செய்த பிறகு அகலமான பந்துகளை வீசினார்கள். டக்கட் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளை விரும்பினார். அதில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தார். பின்னர் மழையின் தாமதத்திற்கு பிறகு ஸ்கூப்பிங் முறையில் பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாச ஆரம்பித்தார். பின்னர் இறுதியாக அதே முறையில் ஷாட் விளையாடப் போய் ஆட்டம் இழந்தாலும் அவர் சிறப்பாக விளையாடினார்.

இதையும் படிங்க:104 ரன் 7 விக்கெட்.. 93/5 டு 211/5.. பேட்டிங் பவுலிங்கில் இங்கிலாந்துக்கு இலங்கை அணி பதிலடி.. 3வது டெஸ்ட்

அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் அவருக்கு முன்னர் விளையாடிய ஏராளமான தொடக்க ஆட்டக்காரர்கள் இதே போன்று ஷாட்களை விளையாட விட்டாலும் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்கள். சில நேரங்களில் பயிற்சியாளர்கள் இது குறித்து விவாதிப்பார்கள். ஆனால் மெக்கல்லம் அது போன்று ஆள் அல்ல. ரிஸ்க் எடுக்க விரும்பும் மெக்கலத்தின் அணுகுமுறையில் டக்கெட் மையமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 79 பந்துகளில் ஒன்பது பௌண்டரி மற்றும் இரண்டு சிக்சர்களோடு 86 ரன்கள் டக்கெட் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -