உலக கிரிக்கெட்

430 ரன் 8 விக்கெட்.. சண்டிமல் சவால் பலிக்குமா.. இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை உலக சாதனை படைக்குமா?.. சுவாரசிய கட்டத்தில் 2வது டெஸ்ட்

இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நான்காவது இன்னிங்ஸ்க்கு முன்னேறி இருக்கிறது. மெகா டார்கெட்டை நோக்கி விளையாடும் இலங்கையணி ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கின்ற நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மெகா முன்னிலை

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118 ரன்கள் எடுத்தார்கள். அசிதா பெர்னாடோ 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 196 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த கமிந்து மெண்டிஸ் விளையாடி 74 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஜோ ரூட் மீண்டும் சதம்

இங்கிலாந்து அணி 231 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி 251 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தது 103 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசிதா பெர்னாடோ மற்றும் லகிரு குமாரா இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க :

இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 483 ரன்கள் இலக்கு நிர்ணைக்கப்பட்டது. இன்று மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியின் கையில் எட்டு விக்கெட் கைவசம் இருக்க, வெற்றிக்கு 430 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த மெகா இலக்கை எட்டி தினேஷ் சண்டிமல் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டிருந்ததை இலங்கை அணி செய்யுமா? சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை துரத்துவதில் சரித்திர சாதனை படைக்குமா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -
Published by

Recent Posts