358 ரன்.. ஜோ ரூட் சாதனை சதம்.. கலக்கும் கடைசிக்கட்ட பார்ட்னர்ஷிப்கள்.. இலங்கை டெஸ்டில் இங்கிலாந்து முன்னிலை

0
530
Root

தற்போது இங்கிலாந்து இலங்கை அணிகள் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் ஜோ ரூட் சாதனை சதத்தால் இங்கிலாந்து அணி வலிமையான நிலையில் இருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்த முறை முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

சிறப்பாக ஆரம்பித்த இலங்கை

முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் டான் லாரன்ஸ் 9, பென் டக்கெட் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஒல்லி போப் 1 ரன்னில் வெளியேறி மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

இதற்கு அடுத்து இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் மற்றும் துணை கேப்டன் ஹாரி புரூக் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி 73 பந்துகளுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஹாரி புரூக் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் 21 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

ஜோ ரூட் சாதனை சதம்

இதைத் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 33வது சதத்தை அடித்தார். மேலும் இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கும் அலைஸ்டர் குக் சாதனையை சமன் செய்தார். மேலும் தற்போது தலா 32 சதங்களுடன் இருக்கும் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் தாண்டினார்.

ஜோ ரூட் அட்கின்சன் உடன் ஜோடி சேர்ந்து 111 பந்துகளில் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மேலும் 26 பந்துகள் சந்தித்து 143 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை கரை சேர்த்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கஸ் அட்கின்சன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 71, மேத்யூ பாட்ஸ் 20 ரன்கள் எடுத்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க : ரோகித் டீம் பங்களாதேஷ சாதாரணமா எடுத்துக்காதிங்க.. அவங்கக்கிட்ட இந்த 2 விஷயம் இருக்கு – சுரேஷ் ரெய்னா அட்வைஸ்

இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 88 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து இருக்கிறது. இலங்கை அணியின் பந்துவீச்சு தரப்பில் அசிததா பெர்னாடோ, லகிரு குமாரா மற்றும் மிலன் ரத்னாயகே மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட் வேண்டி இருக்கிறார். தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி லார்ட்ஸ் டெஸ்டில் இலங்கை அணிக்கு எதிராக வலிமையான நிலையில் இருக்கிறது.

- Advertisement -