நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இன்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதில் இந்திய அணிக்கு நெருக்கடியை உண்டாக்கக்கூடிய தனியாக இருக்கும் நியூசிலாந்து இலங்கை அணி இடம் தோல்வி அடைவது இந்திய அணிக்கு சாதகத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் சண்டிமால் அபார சதம்
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா இந்த முறையும் ஏமாற்றம் அளித்து 3 பந்தில் 1 ரன் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து கருணரத்னே உடன் இணைந்த தினேஷ் சண்டிமால் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார்கள். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 229 பந்துகளில் 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கருணரத்தினே 46 ரன்னில் வெளியேறினார் இதைத்தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் உடன் இணைந்த தினேஷ் சண்டிமால் 202 பந்தில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதியாக தினேஷ் சண்டிமால் அபார சதம் அடித்து 28 பந்துகளில் 16 பவுண்டரிகள் உடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவு
இதைத்தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கவிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் விடாமல் பார்த்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தி இங்கிலாந்து அணியை முதல் நாள் முடிவில் நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்கள்.
இதையும் படிங்க: ஆஸி இந்த 4 இந்திய வீரர்களுக்கு பயப்படுது.. ரோகித் டீமுக்கு மத்தவங்க குழந்தைங்க – பாக் பசித் அலி பேட்டி
இன்று முதல் நாள் முடிவில் இலங்கை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்து இருக்கிறது. ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்பாக விளையாடி 166 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள், அதிரடியாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் 56 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் முதல் நாளில் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறது.