தற்போது இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறி சுருண்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி மிகப்பெரிய முன்னிலை பெற்று இருக்கிறது.தற்போது இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறி சுருண்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி மிகப்பெரிய முன்னிலை பெற்று இருக்கிறது.
நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து அதிரடி
முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்கள் எடுத்தார். மற்றபடி முக்கிய பேட்ஸ்மேன்களிடமிருந்து பெரிய ரன்கள் வரவில்லை. இந்த தொடரில் கேப்டன் ஒல்லி போப் தொடர்ந்து ஏமாற்றம் தந்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் சிறப்பாக விளையாடிய நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 33 வது சர்வதேச டெஸ்ட் சதம் அடித்து 143 ரன்கள் எடுத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட்டிங் வரிசையில் எட்டாவதாக வந்த கஸ் அட்கின்சன் அதிரடியாக 118 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாடோ 5 விக்கெட் கைப்பற்றினார்.
இலங்கை அணியின் சரிவு
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டு போல சரிந்தது. இரண்டாவது நாளான இன்று முதல் சீசனின் பாதியில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆக இலங்கை விளையாட வந்து, மூன்றாவது செஷன் பாதியில் ஆல் அவுட் ஆகிவிட்டது.
இலங்கை அணி 55.3 ஓவர்களில் 196 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த கமிந்து மெண்டிஸ் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 120 பந்துகளில் 174 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 33 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கஸ் அட்கின்சன், மேத்யூ போட்ஸ் நால்வரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : 6வது இடத்தில் வந்தும்.. சாய் சுதர்ஷன் இங்கிலாந்தில் அதிரடி சதம்.. கேப்டன் ருதுராஜ் ஹாப்பி
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்து இருக்கிறது. இரண்டு நாட்கள் முடிவில் தற்பொழுது இங்கிலாந்து அணி 256 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருக்க இந்த டெஸ்ட் போட்டியையும் வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி வெல்ல அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.