பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதில் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருக்கிறது.
தற்போது தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
எட்டாவது இடத்தில் அசத்திய தமிழர்
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்சி 177 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்கள் எடுத்து வலிமையான அடித்தளத்தை உருவாக்கி கொடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு வியான் முல்டர் 105 பெடிங்ஹாம் 59 ரன்கள் எடுத்தார்கள். பேட்டிங் வரிசையில் எட்டாவதாக வந்த தமிழர் சேனுரன் முத்துசாமி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 75 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 575 ரன் எடுத்து டிக்ளர் செய்தது. பங்களாதேஷ் தரப்பில் கேப்டன் தைஜூல் இஸ்லாம் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
பங்களாதேஷ் அணி பரிதாபம்
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் முடிவில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி வெறும் ஒன்பது ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்து 537 ரன்கள் பின்தங்கி பரிதாப நிலையில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் ரபாடா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : 3-0 இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்வோம்.. WTC பைனலுக்கு போக இந்த வழியை வச்சிருக்கோம் – நியூஸி கோச் சவால்
தென் ஆப்ரிக்க அணி இந்த டெஸ்ட் போட்டியை வெல்லக்கூடிய அதிகபட்ச வாய்ப்பில் தற்பொழுது இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வென்றால் தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.






