உலக கிரிக்கெட்

19 ரன்னுக்கு 5 விக்கெட்.. பங்களாதேஷை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றி.. தொடரையும் கைப்பற்றி சாதனை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக பயிற்சி பெறும் விதமாக அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து, அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது அமெரிக்க அணி!

- Advertisement -

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் அமெரிக்க அணி பங்களாதேஷ் அணியை வென்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அமெரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீபன் டைலர் 28 பந்தில் 31 ரன்கள், மோனக் படேல் 38 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து நான்காவது வீரராக வந்த ஆரோன் ஜோன்ஸ் 34 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து அதிகபட்சமாக கோரி ஆண்டர்சன் 10 பந்தில் 11 இடங்கள் எடுத்து வெளியேறினார். அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் சோரிஃபுல் இஸ்லாம், முஸ்தஃபிஷூர் ரஹமான் மற்றும் ரிசாத் ஹூசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷீட் ஹசன் 15 பந்தில் 19 ரன்கள், சவுமியா சர்க்கார் கோல்டன் டக் என வெளியேறினார்கள். இதற்கு அடுத்து கேப்டன் நஜிபுல் சாந்தோ 34 பந்தில் 36, தவ்ஹீத் ஹ்ரிடாய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நான்கு ஓவர்களில் 5 விக்கெட் கைவசம் இருக்க வெறும்26 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில் அனுபவ வீரர் சாகிப் அல் ஹசன் 23 பந்தில் 30 ரன், மகமதுல்லா 4 பந்தில் 3 ரன் எனத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : நேத்து ஆடறப்ப கோலி இதை என்கிட்ட கேட்டாரு.. நான் உஷாரா பிளான இப்படி மாத்திட்டேன் – அஸ்வின் வெளியிட்ட தகவல்

இறுதியாக பங்களாதேஷ் அணி அடுத்த 19 ரன்கள் 5 விக்கெட்டுகளையும் இழந்து, 19.3 ஓவரில் 138 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பரபரப்பான இந்தப் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே ஒரு போட்டியை அமெரிக்கா வென்று இருந்த நிலையில், இன்று இரண்டாவது போட்டியையும் வென்று தொடரையும் கைப்பற்றியது. அமெரிக்க அணிக்கு ஒரு சரித்திர வெற்றியாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் நீண்ட அனுபவம் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு இது பெரிய அடியாக விழுந்திருக்கிறது!

Published by