இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர்களது நாட்டில் இலங்கை அணி கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இலங்கையின் வீரர் கமிந்து மெண்டிஸ் சாதனை சதம் அடித்து அணியை மீட்டுக் கொண்டிருக்கிறார்.
தற்போது இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் அறிமுக வீரர் மிலன் ரத்னாயகே காப்பாற்றினார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் காப்பாற்றி இருக்கிறார்.
முதல் இன்னிங்ஸ் முடிவுகள்
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் தைரியமாக பேட்டிங் செய்யும் முடிவை எடுத்தது. கேப்டன் தனஞ்செய டி சில்வா 74 ரன்கள் எடுக்க, பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் வந்த அறிமுக வீரர் மிலன் ரத்னாயகே 72 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 236 ரன்கள் எடுத்தது. கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 358 ரன்கள் குறித்தது. 122 ரன்கள் இலங்கை அணியை விட முதல் இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்றது. இங்கிலாந்து அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் அபாரமாக விளையாடி சதம் அடித்து 111 ரன்கள் குவித்தார்.
இலங்கை அணியின் தீவிரப் போராட்டம்
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இலங்கை அணி துவக்க ஆட்டக்காரர்கள் நிஸான் மதுஷ்கா 0, திமுத் கருணரத்தினே 27, குசால் மெண்டிஸ் 0 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்த நிலையில் நான்காவது இடத்தில் வந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து கேப்டன் தனஞ்செய டி சில்வா 11, மிலன் ரத்னாயகே 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை கமிந்து அரைசதம் அடித்தார். தினேஷ் சண்டிமால் உடன் இருந்தார். இலங்கை அணி மூன்றாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து இன்று நான்காவது நாளில் விளையாடிய இலங்கை அணி முதல் செசனை விக்கெட் இழப்பில்லாமல் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன் என முடித்தது. தினேஷ் சண்டிமால் அரை சதம் மற்றும் கமிந்து மெண்டிஸ் சதம் அடித்து அசத்தினார்கள்.
இதையும் படிங்க : சர்வதேச டி 20 கிரிக்கெட்.. சூரியகுமார் யாதவை தாண்டி.. நிக்கோலஸ் பூரன் மாஸ் ரெக்கார்டு
நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ்க்கு இது மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இரண்டு அரை சதங்களும் அடித்திருக்கிறார். மேலும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏழாவது இடத்தில் வந்து இங்கிலாந்தில் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு 1984ஆம் ஆண்டு துலீப் மெண்டிஸ் 94 ரன்கள் எடுத்தது இந்த வகையில் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்க.