இந்திய கிரிக்கெட்

ஒருநாளில் 15 விக்கெட்.. கபில் தேவ் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்.. இந்திய அணி வெல்லுமா? – 5வது சிட்னி டெஸ்ட்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாள் முடிவிலேயே மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று ஒரே நாளில் மொத்தம் 15 விக்கெட்டுகள் விழுந்து இருக்கின்றன.

- Advertisement -

இந்தக் குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் ஸ்காட் போலன்ட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ஒரே நாளில் 15 விக்கெட்

நேற்று முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு அறிமுகவீரர் வெப்ஸ்டர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 22, கேஎல்ராகுல் 13, கில் 13, விராட் கோலி 6, நிதீஷ் குமார் ரெட்டி 4, ரன் என வரிசையாக வெளியேறினார்கள். ஒரு முனையில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 29 பந்தில் அரைசதம் அடித்து 33 பந்தில் 61 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனார். இன்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி ரன்கள் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து, 145 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. ஸ்காட் போலன்ட் நான்கு விக்கெட் கைப்பற்றினார். இன்று ஒரே நாளில் 15 விக்கெட் விழுந்தது.

- Advertisement -

கபில்தேவ் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரராக இந்திய கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் கபில்தேவ் 30 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். இந்த நிலையில் இன்று 29 பந்தில் அடித்து இரண்டாவது இடத்தில் கபில்தேவ் செய்திருந்த சாதனையையும் உடைத்தார்.

இதையும் படிங்க : பும்ராவின் காயம் எப்படியானது.. விவரம் எப்போது வரும்.. நாளை ஆடுவாரா? – வெளியான புதிய தகவல்கள்

தற்போது போட்டி நடைபெற்று வரும் சிட்னி மைதானத்தில் கடைசியாக பத்து போட்டிகளில் ஒரே ஒருமுறை மட்டுமே 200 ரன்னுக்கும் மேற்பட்ட இலக்கு வெற்றிகரமாக துரத்தப்பட்டு இருக்கிறது. இந்திய அணி 200 ரன் தாண்டி இலக்கு வைத்தால் இந்த போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -
Published by