ஐபிஎல் 2025.. அணியை பாதியில் விட்டு மாலத்தீவு செல்வதற்கு பெயர் தான் மெண்டரா? பீட்டர்சனை கலாய்த்த ராகுல்

0
19

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தற்போது டெல்லி அணி அபாரமாக விளையாடி வருகிறது. 34 லீக் ஆட்டம் முடிவடைந்த நிலையில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வி என்ன 10 புள்ளிகள் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிராக தங்களுடைய ஏழாவது லீக் ஆட்டத்தில் டெல்லி விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பு டெல்லி அணி வீரர்கள் அகமதாபாத் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பீட்டர்சன் டெல்லி அணி வீரர்களை சந்தித்து உரையாடல் நடத்தினார். அப்போது ராகுலை பார்த்தவுடன் அவர் பேச வந்தார்.

- Advertisement -

இது தான் மெண்டர் வேலையா?

ஆனால் திடீரென்று ராகுல் பீட்டர்சனை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சகோதரர் ராகுல் எப்படி சென்று கொண்டிருக்கிறது? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று பீட்டர்சன் கேட்டு இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த ராகுல்ழ் மென்டர் என்பவர் யார் என்றால், தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென்று  பாதியில் அணியை விட்டு மாலத்தீவுக்கு சென்று இரண்டு வாரம் அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் வருபவர் தான் என்று கூறி கிண்டல் அடித்திருக்கிறார்.இந்த பதிலை பீட்டர்சன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. டெல்லி அணியில் மென்டராக பீட்டர்சன் இணைந்த நிலையில் திடீரென்று அணியை விட்டு சென்று மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.

- Advertisement -

பீட்டர்சன் பதில்:

இது யாருக்கும் தெரியாத நிலையில் தற்போது ராகுல் உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார். இதனால் பலரும் இதுதான் மெண்டர் வேலையா?இந்த உண்மையை வெளிப்படுத்திய ராகுலுக்கு நன்றி என்று கூறி வருகின்றன. எனினும் இந்த வீடியோ கீழ் வீட்டு கமெண்ட் ஒன்றை  பீட்டர்சன் போட்டு இருக்கிறார். அதில் ஒரு அணியை புத்திசாலியாக வழிநடத்தக்கூடிய ஒருவர் களத்திலும் செயல்படுவார். அதே சமயம் விடுமுறையும் சரியாக திட்டமிடுவார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. விராட் கோலி போன்ற ஜாம்பவான் இந்த தவறை செய்யலாமா? முகமது கையிப் கேள்வி

எப்படி பேட்டிங்கில் ஸ்விட்ச் ஹிட் ஆடுகிறோமோ, அதே போல் முக்கியமான கட்டத்தில் கூட சிறந்த விடுமுறை எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு நேரம் கிடைக்கும் போது அவர் சென்று விடுவார். எப்போதுமே அந்த நபர் ஒருபுறம் கிரிக்கெட் யுக்திகளை தொடர்பான அட்டைகளையும், மறுபுறம் எங்கு விடுமுறைக்கு செல்லலாம் என்ற தகவலையும் வைத்திருப்பார் என்று பீட்டர்சன் பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -