பாகிஸ்தான் டாஸ் ஜெயித்து தவறு செய்து விட்டது.. சூரியகுமார் வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
168
Surya

இன்று ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது.

இந்த நிலையில் டாஸ் முடிந்ததும் இந்திய கேப்டன் சூரியகுமார் பேசிய விஷயம் மிகவும் முக்கியமானதாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் இருநாட்டு ரசிகர்களும் இந்த முடிவு சரியா தவறா? என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள்.

- Advertisement -

ஒரே பாதையில் இரு அணிகள்

இந்த போட்டிக்கு இரு அணிகளும் மாற்றம் செய்யப்படுமா என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த நிலையில் இரு அணிகளும் முதல் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவன் உடன் களம் இறங்குகின்றன. இது கிரிக்கெட் வல்லுனர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தற்போது யுஏஇ கண்டிஷனுக்கு சுழல் பந்து வீச்சு சரியானதாக இருக்கும் என ஆசியக் கோப்பை தொடரில் இருக்கும் அனைத்து அணிகளும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே இந்த தொடரில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சிலர் வெளியில் இருக்க வேண்டியதாக இருக்கும்.

- Advertisement -

சூரியகுமார் வெளியிட்ட தகவல்

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பேசும் பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். நாங்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட் விளையாடி வருவது உற்சாகமாக இருக்கிறது. மேலும் இது மெதுவான ஆடுகளம் போல் தெரிகிறது. எனவே முதலில் பேட்டிங் செய்து ரன்கள் குவிக்க வேண்டும். நாங்கள் இங்கு சில நாட்களாக தொடர்ந்து இருந்து வருவதால் கண்டிஷன் பழகிவிட்டது”

இதையும் படிங்க : பாகிஸ்தான் பயிற்சியாளரை அந்த பிளேயர் காப்பாத்தட்டும்.. இந்தியா கூட வச்சு பேசாதீங்க – கங்குலி நச் பதில்

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நாங்கள் பந்து வீசவே விரும்பினோம். இந்த முடிவில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் நாங்கள் இங்கு பக்கத்தில் விளையாடி பயிற்சி பெற்றோம். இரவில் ஈரமாக இருக்கிறது, பனிப்பொழிவு வருகிறது. இரண்டாவது பேட்டிங் செய்வது கொஞ்சம் வசதியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தவறு செய்து விட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -