பாகிஸ்தான் பயிற்சியாளரை அந்த பிளேயர் காப்பாத்தட்டும்.. இந்தியா கூட வச்சு பேசாதீங்க – கங்குலி நச் பதில்

0
73
Ganguly

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாகிஸ்தான் அணியை இந்திய அணியுடன் ஒப்பிடக்கூடாது என கூறியிருக்கிறார்.

மேலும் கங்குலி கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பயிற்சியாளர் முகமது நவாஸை உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் என்று குறிப்பிட்டிருப்பது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கும் கங்குலி தன்னுடைய பாணியில் பதிலளித்திருக்கிறார்.

- Advertisement -

தொடரும் சர்ச்சை

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தங்கள் அணியில் உள்ள இடது கை சுழல் பந்துவீச்சாளர் முகமது நவாஸை உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் என்று குறிப்பிட்டார். இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற நிருபிக்கப்பட்ட பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில், இவரது கருத்து சர்ச்சையாக மாறி வருகிறது.

மேலும் இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்ட இந்த பயிற்சியாளர் ஆர்சிபி அணிக்கு ஏற்கனவே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த பொழுது அந்த அணி பெரிதான வெற்றிகள் பெறவில்லை, அதேபோல பாகிஸ்தான் அணியும் பெரிய வெற்றிகள் பெறாது என்று குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

யார் அந்த பவுலர்?

இது குறித்து பதிலளித்துள்ள கங்குலி பேசும் பொழுது “எனக்கு அந்த பவுலர் யார் என்று தெரியாது. நீங்கள் முகமது நவாஸ் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் அந்த பவுலர் பாகிஸ்தான் பயிற்சியாளர் சொன்ன கருத்துக்கு அவரைக் காப்பாற்றட்டும்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை.. கம்பீர் செய்ததில் எந்த தவறும் இல்லை.. சிஎஸ்கே வீரருக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்

“தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணி நாங்கள் விளையாடிய சிறந்த பாகிஸ்தான் அணி கிடையாது. தற்பொழுது பகார் ஜமான் மற்றும் ஷாகின் அப்ரிடி இருக்கிறார்கள். மேலும் வாசிம்-வக்கார் ஜோடிக்கு முன்னால் ஷாஹீன்-ரவூப் ஜோடி வர முடியாது. பாகிஸ்தான் கணிக்க முடியாத அணியாக இருந்த காலம் போய்விட்டது. இப்படிப்பட்ட அணியை இந்திய அணியுடன் ஒப்பிடக்கூடாது” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -