ரோகித் செஞ்ச அந்த தப்ப நானும் செஞ்சி இருப்பேன்.. எங்களுக்கு தைரியம் தந்தது இவர்தான் – டாம் லாதம் பேட்டி

0
64
Latham

இன்று நியூசிலாந்த அணி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேசியிருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மிக மோசமாக விளையாடி நியூசிலாந்து அணி தோற்று இருந்தது. இதற்கு அடுத்து இந்தியா வந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ரோகித் செய்த அதே தவறு

இது குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறும் பொழுது “இந்தியா செய்தது போல டாஸ் ஜெயித்திருந்தால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம். நல்ல வேலையாக நாங்கள் டாஸ் தோற்று விட்டோம். நாங்கள் பந்தை சரியான இடங்களில் வைத்து நல்ல பலனை பெற்றோம். போட்டியின் முதல் இரண்டு இன்னிங்ஸ் எங்களுக்கு ஆட்டத்தை நல்ல முறையில் அமைத்துக் கொடுத்தது. இதற்கு அடுத்து இந்தியா எங்களிடம் திரும்பும் என்று தெரியும். ஆனால் அப்பொழுது இரண்டாவது புதிய பந்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு மடக்கினார்கள்”

“இந்த போட்டியில் சமநிலையில் இருந்த பொழுது ரச்சின் ரவீந்தரா மற்றும் சவுதி அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களை போட்டிக்கு முன்னணியில் கொண்டு வந்தது. மேலும் இந்த போட்டியில் வெறும் நூறு ரன்களை மட்டுமே துரத்துவது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ரூர்க் வேகப் பந்துவீச்சில் பவுன்ஸ், வேகம், பந்தை காற்றில் நகர்த்துவது என சிறப்பாக இருந்தார். அவருக்கு மூத்த பந்துவீச்சாளர்கள் ஹென்றி மற்றும் சவுதி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்”

- Advertisement -

எங்கள் பதட்டத்தை இவர் தணித்தார்

“சவுதி பந்து வீசிய விதம் எங்களுக்கு நல்ல தொனியை அமைத்துக் கொடுத்தது. மேலும் அவருடைய பேட்டிங் திறமை பற்றி நாங்கள் அறிவோம். இளைஞன் ரச்சின் ரவீந்தரா சில காலத்திற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்து ஒரு புதிய பாத்திரத்தை ஏற்று, அதில் அவர் தன்னை மிகச் சிறப்பாக நிரூபித்து விளையாடி கொண்டு வருகிறார்”

இதையும் படிங்க : இந்திய அணி தோல்வி.. WTC புள்ளி பட்டியலில் முக்கிய மாற்றம்.. பைனலுக்கு போக என்ன நடக்க வேண்டும்?

“மிகக்குறிப்பாக இன்று நாங்கள் குறைந்த இலக்கை மட்டுமே துரத்திக் கொண்டு இருந்தாலும் கூட, எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு பதட்டம் இருந்தது. ஆனால் சச்சின் ரவீந்தரா பேட்டிங் செய்த விதத்தால் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த பதட்டம் அப்படியே போய்விட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -