328/4… ஷான் மசூத் ஷபிக் மாஸான சதங்கள்.. கம்பேக் கொடுத்த பாகிஸ்தான்.. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி

0
241
Masood

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உள்நாட்டில் முல்தான் மைதானத்தில் பாகிஸ்தான் அணி முதல் நாளில் அபாரமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது.

தற்போது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பெண் ஸ்டோக்ஸ் தலைமையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. எனவே துணை கேப்டன் ஒல்லி போப் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார்.

- Advertisement -

இரண்டாவது விக்கெட் மெகா பார்ட்னர்ஷிப்

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் உடன் கேப்டன் ஷான் மசூத் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் மிக சிறப்பாக விளையாடிய இருவருமே சதம் அடித்தார்கள். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 338 பந்துகளில் 253 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்துல்லா ஷபிக் சதம் அடித்து 184 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் கேப்டன் இன்னிங்ஸ்

இதைத்தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் 177 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் பலரது விமர்சனத்திற்கும் பாகிஸ்தான் கேப்டன் முற்றுப்புள்ளி வைத்தார். இதைத்தொடர்ந்து போட்டி முடியும் நேரத்தில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 71 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க : லக்னோ ஹைதராபாத் அணிகளை சிக்க வைத்த கம்பீர்.. கொல்கத்தா அணியை மட்டும் காப்பாற்றுகிறாரா? – முழு அலசல்

இன்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் துணை கேப்டன் சவுத் ஷகீல் 72 ரன்கள் மற்றும் நைட் வாட்ச்மேன் நசீம் ஷா 3 பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் பேட்டிங் செய்ய சாதகமான தார் ரோடு போன்ற ஆடுகளத்தை அமைத்து விட்டதான குற்றச்சாட்டுகளும் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -