1348 நாட்கள்.. இரண்டே பவுலர்களிடம் வீழ்ந்த இங்கிலாந்து.. பாகிஸ்தான் அணி அபார வெற்றி.. முல்தான் இரண்டாவது டெஸ்ட்

0
202
Pakistan

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்று இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு கம்ரன் குலாம் 224 பந்தில் 118 ரன் எடுக்க முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் சேர்த்தது. ஜாக் லீச் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

வேகமாக ஆரம்பித்து வேகமாக விழுந்த இங்கிலாந்து

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 129 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். ஆனால் கடைசி 80 ரன்னுக்கு எட்டு விக்கெட் இழந்த இங்கிலாந்து 291 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் ஏழு விக்கெட் கைப்பற்றினார்.

இது தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆகா சல்மான் 63 ரன் எடுக்க அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து பந்துவீச்சில் சோயப் பஷீர் நான்கு விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இரண்டே பவுலரிடம் வீழ்ந்த இங்கிலாந்து

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 152 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்து இருக்கிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சில் நோமன் அலி 8 மற்றும் சஜித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்கள். மேலும் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் இவர்கள் இருவர் மட்டுமே பந்து வீசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களிடம் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி சாரணடைந்துவிட்டது.

இதையும் படிங்க : ரோகித்த இதுக்காக எல்லாரும் மதிக்கிறாங்க.. ஆனால் விராட் கோலி வேற மாதிரி – டிம் சவுதி பேச்சு

மேலும் பாகிஸ்தான அணி உள்நாட்டில் 1348 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் தலைமையில் தொடர் ஆறு தோல்விகளுக்குப் பிறகு, ஏழாவது போட்டியில் பாகிஸ்தான் முதல் வெற்றியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்றிருக்கிறது.

- Advertisement -