இன்னும் 5 விக்கெட்.. பங்களாதேஷ் டி20 தொடரில்.. ஹர்திக் பாண்டியா 2 ஸ்பெஷல் சாதனைகள் படைக்க வாய்ப்பு

0
25
Hardik

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 இந்திய மெகா சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

இரண்டு அணிகளும் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவுக்கு நீண்ட ஓய்வும் ரகசியமும்

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ஹர்திக் பாண்டியாவுக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்து இந்திய அணிக்கு மொத்தமாக 40 நாளுக்கும் மேற்பட்ட ஓய்வு கொடுக்கப்பட்டது. இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது.

எனவே ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வளவு பெரிய ஓய்வு அவருக்கு கொடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அவரை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அழைத்துச் செல்ல கம்பீர் விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா படைக்க இருக்கும் சாதனைகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சாகல் மொத்தம் 96 விக்கெட் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 90 விக்கெட் உடன் இருக்கிறார். ஹர்திக்பாண்டியா 86 விக்கெட் எடுத்திருக்கிறார். இன்னும் ஐந்து விக்கெட் எடுத்தாள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளராக மாறுவார். மேலும் 4 விக்கெட் கைப்பற்றினால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக மாறுவார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக கிரிக்கெட் கைப்பற்றியவர்கள் :

யுஸ்வேந்திர சாஹல் – 96
புவனேஷ்வர் குமார் – 90
ஜஸ்பிரித் பும்ரா – 89
ஹர்திக் பாண்டியா – 86
அர்ஷ்தீப் சிங் – 83

இதையும் படிங்க : ரோகித் விராட் ரூட் கிடையாது.. இப்ப இவர்தான் ஆல் ஃபார்மேட் பெஸ்ட் பேட்ஸ்மேன் – தினேஷ் கார்த்திக் தேர்வு

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் :

யுஸ்வேந்திர சாஹல் (இந்தியா) – 9
தீபக் சாஹர் (இந்தியா) – 8
அல்-அமின் ஹொசைன் (வங்காளதேசம்) – 8
ரூபெல் ஹொசைன் (வங்காளதேசம்) -7
வாஷிங்டன் சுந்தர் (இந்தியா) –7
ஷாகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) -7
ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 6
ஹர்திக் பாண்டியா (இந்தியா) – 6

- Advertisement -