7 ஃபோர்ஸ் 4 சிக்ஸ்.. 193 ஸ்ட்ரைக் ரேட்.. சச்சின் டெண்டுல்கரின் அதிரடி வீண்.. ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் இந்திய அணிக்கு எதிரா இமாலய வெற்றி

0
956

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் மீண்டும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 7 பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். வதோராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியுடன் இந்திய மாஸ்டர்ஸ் அணி பல பரீட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற இந்திய மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் வாட்சன் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்.

- Advertisement -

இந்திய வீரர்களின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்த அவர், 52 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்சர்கள், 12 பௌண்டரிகள் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 211 என்ற அளவில் இருந்தது. இதேபோன்று பென்டங்க் 53 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார்.

சச்சின் அபார ஆட்டம்:

இதில் 12 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. வினய் குமார் 4 ஓவர்கள் வீசி 73 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதை அடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மாஸ்டர்ஸ் அணி களமிறங்கியது. இதனால் 52 வயதான சச்சின் தன்னுடைய வழக்கமான அதிரடியை காட்டினார். ஆஸ்திரேலிய வீரரின் பந்துவீச்சை சச்சின் சுக்கு நூறாக உடைத்தார். சச்சின் ஆட்டத்தை பார்க்கும் போது ஏதோ டைம் டிராவல் செய்தது போல் இருந்தது. 33 பந்துகளில் அவர் 64 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 193 என்ற அளவில் இருந்தது.

புள்ளி பட்டியல் விவரம்:

எனினும் சச்சினை போல் மற்ற வீரர்கள் ரன்கள் குவிக்க தடுமாறினர் நமன் ஒஜா 19 ரன்களும், இர்பான் பதான் 11 ரன்களும்,யூசுப் பதான் 25 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்திய மாஸ்டர் அணி 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு சேவியர் தோரத்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் மூலம் இந்திய மாஸ்டர்ஸ் அணி நடப்பு தொடரில் முதல் தோல்வியை தழுவி இருக்கிறது.

இதையும் படிங்க: CT 2025: பைனலில் இந்தியா நியூஸிலாந்து.. ஒருவேளை போட்டி ரத்தானல் யாருக்கு கோப்பை.?. மழைக்கு வாய்ப்பு இருக்கா.?. முழு விபரம்

என்னும் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகள் உடன் இந்திய மாஸ்டர்ஸ் அணி முதலிடத்திலும், இலங்கை மாஸ்டர்ஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும்,இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி புள்ளிகள் ஏதும் இன்றி ஆறாவது இடத்திலும் உள்ளது.

- Advertisement -