9 ஃபோர்ஸ்.. 9 சிக்ஸ்.. 43 வயதிலும் வாட்சன் அதிரடி சதம்.. ஆஸி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரன் குவிப்பு.. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் டி20 தொடரில் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் கெயில் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியும், வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது.

- Advertisement -

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியில் தொடக்க வீரராக வாட்சனும் பென் டங்க்கும் களமிறங்கினர். வாட்சனுக்கு 43 வயது ஆகிறது. இவருக்கும் தோனிக்கும் தற்போது ஒரே வயதுதான்.

ஆனால் வாட்சன் தொழில் முறை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு தற்போது இதுபோன்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் தொடரில்தான் விளையாடுகிறார். ஆனால் தொழில் முறை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வாட்சனின் ஆட்டம் இருந்தது.

மைதானத்தில் பறந்த சிக்சர்கள்:

சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது எப்படி அதிரடி காட்டுவாரோ, அதேபோல் ஒரு ஆக்ரோஷமான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். பிடில் எட்வர்ட்ஸ், ஜோரம் டைலர்,ராம் பால் டிவைன் ஸ்மித் போன்ற வீரர்கள் பந்துவீச்சை வாட்சன் மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

- Advertisement -

வாட்சன் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து இவருக்கு உண்மையிலேயே வயசு ஆகல என்று அப்பாஸ் கூறுவாரோ அதேபோல் வாட்சனுக்கு வயதாகவில்லை. அவர் ஏன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

107 ரன்கள் குவித்த வாட்சன்:

52 பந்துகளை எதிர்கொண்ட வாட்சன் 107 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது பௌண்டரிகளும் சிக்சர்களும் அடங்கும். வாட்சன் ஸ்ட்ரைக் ரேட் 205 என்று அளவில் இருந்தது. இதேபோன்று கிறிஸ்டியன் 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அனி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க- சிஎஸ்கே வீரர் சாதனை சதம்.. பிரேஸ்வெல் அசத்தல் பவுலிங்.. 5 விக்கெட்டில் நியூஸி அணி பங்களாதேஷை வீழ்த்தியது.. சாம்பியன்ஸ் டிராபி

இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியில் கெயில் களமிறங்கினார். அவர் 12 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். எனினும் முன்னாள் சிஎஸ்கே வீரர் டிவைன் ஸ்மித் 29 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரைன் லாரா 21 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -
Published by