உலக கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் இந்த நிலைமைக்கு காரணம் இந்தியாதான்.. வீரர்கள் அழுதார்கள் – இமாம் உல் ஹக் பேட்டி

தற்போது பாகிஸ்தான் அணி பல தோல்விகளை சந்திப்பதற்கு காரணமாக இருப்பதின் பின்னாடி குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு இலங்கையில் ஹைபிரிட் மாடலில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றது. அந்தத் தொடருக்கு முன்பு வரை பாகிஸ்தான் அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் அணியாகவே வெளியில் எல்லோராலும் அறியப்பட்டது. அதற்கு அடுத்து நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை விட செட்டில் ஆன அணி என்று கூறப்பட்டது.

எல்லாவற்றையும் மாற்றிய ஆசியக் கோப்பை

இந்த நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றில் பாகிஸ்தான் அணி பெரிய ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இதற்கு அடுத்து இரண்டாவது சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 200க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கேஎல்.ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடித்தார்கள்.

மேலும் இலங்கை உடன் வென்றே ஆக வேண்டிய போட்டியில் வெல்ல வேண்டிய நிலையில் இருந்து கடைசியாக பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதன் காரணமாக இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அடுத்து இந்தியாவில் உடனடியாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிவரை தோற்று அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது. இங்கிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் மீதான பிம்பம் வேகமாக உடைந்தது.

- Advertisement -

வீரர்கள் அழுவதையும் கேட்டேன்

இது குறித்து பேசி இருக்கும் இமாம் உல் ஹக் கூறும்பொழுது ” பாகிஸ்தான் அணி வீரர்களிடையே பிரிவு என்கின்ற வதந்தியை அணி தோல்வி அடையும் ஒவ்வொரு முறையும் நான் கேட்டேன். ஆனால் கடந்த இரண்டு உலகக் கோப்பைகளாக நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் தனிப்பட்ட முறையில் நான் காயப்பட்டேன். ஒருநாள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் எங்களிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தார்கள். நாங்கள் அப்போது நம்பர் ஒன் அணியாகவும் இருந்தோம்”

“அங்கிருந்து எல்லாம் மாறும் பெரிய தொடராக உலகக் கோப்பை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் திடீரென ஆசியக் கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தோம். அங்கிருந்து மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அந்த தோல்வி எங்கள் வீரர்களின் நம்பிக்கையை பெரிய அளவில் குறைத்து விட்டது”

இதையும் படிங்க : பும்ராவுக்கும் சேர்த்து.. இந்திய பவுலர்ஸ் எதிரா என்னோட திட்டம் இதுதான்.. தயாரா இருக்கேன் – ஆஸி தொடக்க வீரர் பேட்டி

“அங்கிருந்து வீரர்கள் மனமுடைந்து போனார்கள். உலகக் கோப்பை தோல்விகளில் எங்கள் வீரர்கள் அழுகிறார்கள் என்று கேட்டேன். சில வீரர்கள் சிரிப்பதை நிறுத்திவிட்டு அறையில் தங்களை பூட்டிக் கொண்டார்கள். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்தியாவில் நாங்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by