“அஸ்வினை பத்திதான் எனக்கு கவலை!” – விராட் கோலி பயிற்சியாளர் தடாலடி கருத்து!

0
1946
Raj Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக ஆஸ்திரேலியா சவுத் ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய மூன்று அணிகளிடம் பலத்த போட்டி நிலவுகிறது!

தற்பொழுது ஆஸ்திரேலியா சவுத் ஆப்பிரிக்கா அணிகள் ஆஸ்திரேலியாவில் மோதி வரும் டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான தொடராகும்!

இதே போல் தற்போது இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்களாதேஷ் அணியுடன் மோதி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் அடுத்த நடைபெற உள்ள இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது முக்கியம்!

இதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடர் விளையாட இந்தியா வருகிறது. இந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டியது முக்கியமானது!

இப்படியான சூழ்நிலையில் இந்திய அணியின் மிக முக்கிய சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரின் பந்துவீச்சு பார்ம் சற்று இறக்கமாக காணப்படுகிறது. 87 டெஸ்ட் போட்டிகளில் 443 விக்கட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளரான அவர், தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கட்டை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது இதைக் கருத்தில் கொண்டு விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் கூறும் பொழுது
” அஸ்வினின் பந்துவீச்சு தற்போது சற்று கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்தான் இந்திய அணியின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளர் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். அவர் வங்கதேசத்தில் பெரிய வெற்றியைத் தற்போது பெறவில்லை. இந்தியா தனது கடைசி ஐந்து டெஸ்டில் நான்கில் வெற்றி பெற வேண்டும் என்றால் அஸ்வின் தனது பந்துவீச்சு பார்மை கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” தற்பொழுது முகமது சமி, பும்ரா உடற்தகுதி என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. இது அஸ்வின் பந்துவீச்சு பார்மை கண்டறிய வேண்டியதன் முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்கிறது ” என்று அழுத்தமாக சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்!