“ஒரே ஒரு ஆண் கிரிக்கெட்டர் இந்த விஷயத்தில் நான் மட்டுமே.. என் கனவே அதுதான்!” – ரிங்கு சிங் அதிரடி பேச்சு!

0
328
Rinku

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் எதிர்கால இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு வீரராக இருக்கிறார்.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய ஒரு பகுதியாக பேட்டிங் வரிசையில் கீழே வந்து விளையாடுவது இருக்கிறது. ஆட்டத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய இடமாக பேட்டிங்கில் அந்த இடம் இருப்பதால் முக்கியத்துவம் மிக அதிகம்.

- Advertisement -

குறிப்பாக ஒரு துவக்க ஆட்டக்காரர் சில போட்டிகளில் ஏமாற்றினால் கூட அது பெரிய கவனத்திற்கு ரசிகர்களுக்கு வராது. கீழ் வரிசையில் இருக்கக்கூடியவர்கள் ரன்களைக் கொண்டு வந்து அதை மறக்கடித்து விடுவார்கள்.

ஆனால் கீழ் வரிசையில் விளையாட கூடியவர்கள் எப்பொழுதெல்லாம் ரன்கள் எடுக்க தவறுகிறார்களோ, பெரும்பாலும் அப்பொழுதெல்லாம் அந்த அணி தோல்வியடையும். எனவே அந்தத் தோல்வியின் மீதான முழுசுமையும் கீழ் வரிசை வீரர்கள் மேலே விழும்.

இதன் காரணமாக கீழ் வரிசையில் வரக்கூடியவர்கள் எல்லா போட்டிகளிலும் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். தற்பொழுது ரிங்கு சிங் கீழ் வரிசையிலும் கடைசி பேட்ஸ்மேனாக வந்து விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரிங்கு சிங் தனது உலகக்கோப்பை கனவு குறித்து பேசிய பொழுது “ஆமாம். நான் உலகக் கோப்பை விளையாட விரும்புகிறேன் அதற்கு தயாராக இருக்கிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது. வாய்ப்பு கிடைத்தால் அதை பிடித்து நிச்சயம் நன்றாக செய்வேன். எந்த வடிவமாக இருந்தாலும் சரி, உலகின் எந்த இடமாக இருந்தாலும் சரி, வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய நூறு சதவீதத்தை தருவேன்.

உத்தரப்பிரதேசம் அலிகார் நகரில் இருந்து ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக விளையாடும் ஒரே ஆண் நான் மட்டுமே. இது மிகப்பெரிய விஷயம். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவும் தன் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதுதான்.

உலகக்கோப்பையில் நானும் இந்த கனவுக்காகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உலகக் கோப்பை இந்திய அணிகள் என் பெயரை பார்த்தால் நான் எப்படி அதற்கு பதில் சொல்வேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் அந்த நாளுக்காகக் காத்திருப்பேன். அந்த இலக்கை நோக்கி நான் கடுமையாக உழைக்கிறேன்.

2013 முதல் கிரிக்கெட் விளையாடி வரும் நான் வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாட விரும்புகிறேன். நேர்மையாக நான் சவால்களை விரும்பக்கூடிய ஒருவன். யாராவது என்னால் முடியாது சாத்தியமற்றது என்று சொன்னால் நான் அதை செய்வேன். என்னை நான் நம்புவதுதான் சிறந்த ஒரு விஷயம்.

நான் பொதுவாக பேட்டிங் ஆர்டரில் கீழே வருகிறேன். இது போன்ற இடங்களில் பேட்டிங் செய்யும்பொழுது நெருக்கடிகள் இயல்பாகவே உருவாகின்றன. எனவே நான் இப்படியான சூழ்நிலைகளை இப்போது நன்கு உணர்ந்து புரிந்து இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!