முரளிதரன், நரேன் ரெண்டு பேரும் ஓரமா போங்க… நான் தான் பெஸ்ட் ஆப்-ஸ்பின்னர் – அட்டகாசம் பண்ணிய யுனிவெர்சல் பாஸ்!

0
143

எனது ஆப்-ஸ்பின் பவுலிங் தான் மிகச் சிறந்தது. முத்தையா முரளிதரன் சுழல் நரேன் ஆகியோர் இதற்கு ஈடாக முடியாது என்று சமீபத்திய பேட்டியில் கிறிஸ் கெயில் பேசி உள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதத்துடன் 43 வயதை நிறைவு செய்யும் கிரிஸ் கெயில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவர் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். இவருக்கு உள்நாட்டு நண்பர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு அணிகளிலும் நண்பர்கள் பலர் இருக்கின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்தந்த ஊரின் உள்ளூர் டி20 லீக் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்

- Advertisement -

கிறிஸ் கெயில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விளையாடினார். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. தற்போது கரீபியன் தீவுகளில் நடைபெறவிருக்கும் 60 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த தொடரின் முக்கியமான வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

பேட்டிங் மட்டுமல்லாது, பந்துவீச்சிலும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வரும் இவர் தனது சமீபத்திய பேட்டியில், “எனது ஆப்-ஸ்பின் பவுலிங் தான் உலகத்திலேயே சிறந்தது. எனது ஆப்-ஸ்பின்னுக்கு முத்தையா முரளிதரன் கூட ஈடாக முடியாது. நான் இயற்கையாக வீசுகிறேன். சுனில் நரேனை விட குறைவான எக்கனாமி வைத்திருக்கிறேன்.” என்றார்.

டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட 15,000 ரன்கள் அடித்திருக்கும் கிறிஸ் கெயில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த 60 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “மீண்டும் என்னை குழந்தை போல உணர்கிறேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை விருப்பமாகக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் எனது முழு உடல் தகுதிக்கு திரும்புவேன். அதற்காக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டையும் பயிற்சி செய்து வருகிறேன். டி20 உலக கோப்பை குறித்து தற்போது என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் எனது இலக்கு அதுவாக தான் இருக்கும்.” என்று தனது குறிப்பிட்டார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கிறிஸ் கெயில் பங்கேற்றுக்கொண்டார். ஆனால் அவரை எடுப்பதற்கு எந்த அணியும் முன்வரவில்லை. ஆகையால் கடைசியில் விற்காத வீரர்களின் பட்டியலுக்கு தள்ளப்பட்டு வெளியேறினார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் நிச்சயம் பங்கேற்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் அவர் தனது பேட்டியில் மறைமுகமாக குறிப்பிட்டார்.

சர்வதேச டி20 போட்டிகளில் கையில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.