“என் சிறந்த நண்பனுக்கு இதை செய்யறதுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு!” – ஜோஸ் பட்லர் வேதனையான பேச்சு!

0
601
Buttler

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் அணியாக, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இருக்கிறது!

இந்த உலகக் கோப்பையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்கின்ற நோக்கத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்த பென் ஸ்டோக்சை திரும்ப இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் உள்ளே கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் முதலில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்த 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில், வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான ஹாரி புரூக்கை சேர்க்கவில்லை.

இது இங்கிலாந்து தாண்டி உலக கிரிக்கெட்டில் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கிய விஷயமாக இருந்தது. அவருடைய இடம் பென் ஸ்டோக்ஸ் வசம் சென்றதாக விமர்சனமும் செய்யப்பட்டது. இது மிகக் கடினமான முடிவென்று கேப்டன் ஜோஸ் பட்லர் அப்பொழுது பேசி இருந்தார்.

தற்பொழுது இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் ஜேசன் ராய் அதிரடியாக நீக்கப்பட்டு, ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டு, அவரது இடத்தில் இளம் வீரர் ஹாரி புரூக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்
“எந்த நேரமும் எளிதானது என்று நான் நினைக்கவில்லை. கேப்டனாக இருப்பதின் ஒரு பகுதி வேலை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. ஒரு வீரரை நீக்குவது என்பது அவர் சிறந்த நண்பராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல விஷயம் கிடையாது. ஆனால் அதற்கான செய்தியை கொடுப்பது எனது பொறுப்பு. ஜேசன் ராய் என்னுடைய சிறந்த அணி வீரர். அவரை நீக்குவது என்பது கடினமான முடிவு.

தற்பொழுது நல்ல வீரர்களும் அணியில் இடத்தை தவற விடுகிறார்கள். இந்த கொடூரமான ஒன்று விளையாட்டின் இயல்பாக இருக்கிறது. சிறந்த வீரர்களும் தற்போது 15 பேர் கொண்ட அணிக்கு வெளியே இருக்கிறார்கள். இது நல்ல தலைவலி.

ஹாரி புரூக் அணியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்கிறார். இதன் காரணமாக அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஜேசன் ராய் ரிசர்வ் வீரராகத் தொடர்வார்!” என்று கூறியிருக்கிறார்.

ஒருநாள் உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.