நான் எல்லாம் இல்லை.. ஃபுல் ஷாட் அடிக்கிறதுல அவர் பக்கத்துல யாருமே போக முடியாது.. ரோகித் சர்மா வெளிப்படையான பேச்சு!

0
4372
Rohit

இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை பயணம் மிகவும் வித்தியாசமான ஒன்றாக அமைந்தது. ஆனால் இறுதியில் அவர் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்திருக்கிறார்.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் எல்லா நிலைகளிலும் மிகச் சிறந்த வீரராக வெளிப்பட்டவர் ரோகித் சர்மா. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் அடுத்த சச்சின் என்று கூட அவரைப் பற்றி நிறைய பேர் கணிப்பு சொல்லி இருந்தார்கள்.

- Advertisement -

மும்பை பேட்ஸ்மேன்களுக்கு இருக்கக்கூடிய ரன் சேர்க்கும் தீவிரம் மற்றும் அதிரடியான தைரியம் என அவரது பேட்டிங் மிகச் சிறப்பான ஒன்றாக ஆரம்ப காலகட்டம் முதலே இருந்து வந்தது.

அவர் இந்திய அணிக்கு வந்த காலக்கட்டத்தில் ரேம்ப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் அவரிடம் இருந்தன. அப்போதைய இந்திய பேட்ஸ்மேன்களிடம் இந்த வகையான ஷாட்கள் இருந்தது ரோகித் சர்மா இடம் மட்டும்தான்.

அதே சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள், வேகப்பந்துவீச்சில் கொஞ்சம் தடுமாறக்கூடியவர்களாக இருப்பார்கள். எனவே வேகப்பந்து வீச்சில் புல் ஷாட் அடிப்பதில் எப்பொழுதும் இந்தியர்கள் கொஞ்சம் பின்தங்கியவர்கள்.

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மா ஃபிரண்ட் புட்டில் மிகத் தைரியமாக புல் ஷாட் விளையாடக் கூடியவர். இந்த வகையில் அந்த ஷாட்டை விளையாட கூடியவர்கள் நிறைய பேர் கிடையாது. ரோஹித் சர்மாவுக்கு இருந்த பேட்டிங் டைமிங் காரணமாக, அவர் பேக் புட் போகாமலே இந்த ஷாட்டை அடிப்பார். ரோகித் சர்மா என்றால் புல் ஷாட் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு எளிமையானது அது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட பேட்டியில் அவரிடம் புல் ஷாட் அடிப்பதில் யார் சிறந்தவர்? என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பெயரை கூறினார். இந்த ஷாட் என்றால் ரிக்கி பாண்டிங்தான் என்று கூறியிருக்கிறார்.