இனியும் இப்படிப்பட்ட பிட்ச் கொடுத்தால், நான் அடுத்த ஆஷஸ் போட்டிக்கே வரவில்லை – கோபமாக பேட்டியளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

0
1580

ஆஷஸ் முதல் டெஸ்டில் சரியாக செயல்படாததற்கு மைதானத்தின் பேச்சு காரணம் என்று பேசியுள்ளார் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாள் வரை சென்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 281 ரன்கள் இலக்கை இரண்டாவது இன்னிங்சில் சேஸ் செய்து இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் இன்னும் இரண்டு விக்கெட் இருந்தும் எதற்காக டிக்ளர் செய்தீர்கள் என்று பென் ஸ்டோக்ஸ் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது உலக தரத்திற்கு செயல்படவில்லை. வெறுமனே பந்து வீசவேண்டுமென்று வீசியது போல இருந்தது எனும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது சமீபத்திய பேட்டிகள் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது:

“இனி வரும் போட்டிகளிலும் முதல் டெஸ்டில் இருந்தது போன்ற பிட்ச் இருந்தால் இந்த ஆஷஸ் தொடரை விட்டு நான் விலகுவதை தவிர வேறு வழியில்லை.” என திடுக்கிடும்படி ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பேட்டியில் பேசியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், “இந்த மைதானம் இதுவரை கண்டிவராத அளவிற்கு சற்று மாறுபட்டதாக எனக்கு தோன்றியது. ஆரம்பத்தில் எந்தவித ஸ்விங் இல்லை. போகப்போக ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை. சரியான வேகத்தையும் கொடுக்க முடியவில்லை. முதல் வேகமும் பந்தில் கிடைக்கவில்லை. பவுன்ஸ் ஒவ்வொரு பக்கமும் ஒரு மாதிரி இருந்தது.

போட்டியின் முதல் இன்னிங்சில் நான் புதிய பந்தில் பவுலிங் செய்யவில்லை. பென் ஸ்டோர்ஸ் என்னிடம் வந்து, பந்து வீச முடியுமா? என்று பேசிய போது, இது போன்று பிட்ச் உயரமாக இருக்கும் பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக எடுபடுகிறது. அதற்கேற்றவாறு அவர்கள் வீசினால் விக்கெட் கிடைக்கிறது. நான் பிறகு வீசுகிறேன் என்றேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே போன்று பிட்ச்சுகள் கொடுக்கப்பட்டால், ஆஷஸ் விட்டு வெளியேறுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. என்னால் முடிந்தவற்றை செய்து பார்த்தேன். அனுபவத்தை பயன்படுத்தி பார்த்தேன்.” என்று பேசினார்