நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவது குறித்து தமிழக வீரர் நட்ராஜன் உறுதிப் பேச்சு

0
2360
Thangarasu Natarajan

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடர் ஆக இந்த ஒரு நாள் தொடர் விளையாடப்பட்டு வருகிறது. மேலும் இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர கேப்டனாக ரோஹித் பொறுப்பேற்று விளையாடும் முதல் தொடர் இதுவாகும். கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் கூட்டணி எப்படி அமையப்போகிறது என்பதை காண ரசிகர்கள் தற்போது மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் இதே கூட்டணி தான் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரை நிச்சயம் நீடிக்கும் என்பதால் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதற்கேற்ற அணியை கட்டமைக்கும் பணியில் இப்போதே இந்த கூட்டணி இறங்கியுள்ளது.

உலக கோப்பை தொடருக்கு தரம் வாய்ந்த பந்துவீச்சை கட்டமைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். சஹார், பிரஷித், தாகூர் அறிவுரை தற்போதைய இந்திய அணி தொடர்ந்து முயற்சி செய்து பார்த்து வருகிறது. இவர்கள் கூட அனுபவம் வாய்ந்த ஷமி மற்றும் பும்ரா உள்ளனர். ஆனால் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மீது உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நடராஜன் அறிமுகமானார். மிகவும் சிறப்பாக பந்து வீசினாலும் அடுத்தடுத்து காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவரால் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியவில்லை.

- Advertisement -

தற்போது காயத்திலிருந்து குணமாகி மீண்டும் அணிக்குத் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடராஜன். இது குறித்து அவர் பேசும்போது தனக்கு மிகவும் கைகூடிவரும் யார்க்கர்கள் மற்றும் கட்டர்கள் மீது அதிக கவனம் செலுத்தி பழைய நடராஜராக அணிக்கு திரும்பி வர வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு அணிக்கு திரும்புவதில் நிச்சயம் ஒரு வகையான பதட்டம் இருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.

இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு அணிக்கு திரும்பும் போது தனக்கு எந்தவித பதட்டமும் இல்லை என்று கூறினால் அது பொய் சொல்வது போல் ஆகிவிடும் என்றும் நடராஜன் பேசியுள்ளார். நீண்டகாலமாகவே இடது கை வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் அதிக தட்டுப்பாடு இருப்பதால் நடராஜனின் இந்த வருகை இந்திய ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது