கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

நான் பழைய ஆளுதான்.. ஆனா திலக் விஷயத்தில் ஹர்திக் செய்தது தப்புதான் – தெளிவாக அடித்த இந்திய முன்னாள் வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை பெற்ற பொழுதும், அந்த போட்டி குறித்து சர்ச்சையாகி வருகிறது!

- Advertisement -

காரணம், தனது மூன்றாவது ஆட்டத்தில் விளையாடும் அறிமுக வீரர் திலக் வர்மா நேற்று தன்னுடைய தொடர்ச்சியான இரண்டாவது அரை சதத்தை நோக்கி மிக வலிமையாக சென்று கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தில் வெற்றிக்கு தேவையான ரண்களைக் கொண்டு அவரால் மிக எளிமையாக அரை சதம் அடிக்க முடியும் என்கின்ற நிலைதான் இருந்தது. இந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அவரிடம் ஹிந்தியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து போட்டியை முடிப்பது அவசியம் என்று கூறினார்.

இப்படி கூறிய ஹர்திக் பாண்டியா அதற்கு அடுத்து இரண்டு முறை பந்தை வலிமையாக அடிக்க போய் அவுட் ஆவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தார். இப்படி அவர் கூறியதற்கும் செய்ததற்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. மேலும் திலக் வர்மா அரை சதத்தை எட்ட ஒரு ரன்கள் தேவைப்பட்ட பொழுது, சிக்ஸர் அடித்து அதைச் செய்ய விடாமல் செய்தார். தற்பொழுது இதுதான் சர்ச்சையாகி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” திலக் விதிவிலக்காக மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் தனது முதல் மூன்று டி20 போட்டிகளிலும் 30 ரன்கள் தாண்டிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். கடந்த போட்டியில் அரை சதம் அடித்தார் இந்த போட்டியிலும் அதை நோக்கி மிக நன்றாக முன்னேறினார்.

நேர்மையாக சொல்வது என்றால் அவர் அரை சதம் அடித்திருக்க வேண்டும். திலக் அரை சதம் அடிக்க இது ஒரு தனிப்பட்ட வாய்ப்பாக நான் உணர்ந்தேன். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது என்னுடைய கருத்து. நீங்கள் இதற்காக என்னை பழமையானவர் என்று கூட கூறிக் கொள்ளலாம்.

கேப்டன் ஹர்திக் பேட் செய்ய வந்தார். அவர் நாட் அவுட் ஆக இருக்க வேண்டும் என்று கூறினார். களத்தில் இருந்து போட்டியை முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஹர்திக் இரண்டு முறை தவறான பெரிய ஷாட்கள் விளையாடி அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார்.

உங்களுக்கு இந்த போட்டியில் ரன் ரேட் தேவையே கிடையாது. போட்டியில் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதுமில்லை. மேலும் இவரே அவுட் ஆகக்கூடாது கடைசி வரை நிற்க வேண்டும் என்று கூறிவிட்டு, தவறாக பெரிய ஷாட்களுக்கு போனார். இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by