இண்டர்நேஷனல் லீக் டி20 சீசன் 4 வரும் டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பு சாம்பியனான துபாய் கேப்பிட்டல்ஸ், டெசர்ட் வைப்பர்ஸை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி, கடந்த சீசனின் பரபரப்பான இறுதிப் போட்டியின் ரிப்ளேவாக இருக்கும்.
இந்தப் போட்டிகள் அனைத்தும் உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்கும். கடந்த சீசன் 3-ல் இந்த இரு அணிகளும் இந்த தொடரின் மிக மறக்கமுடியாத ஆட்டங்களில் ஒன்றை வழங்கியதால், ரசிகர்கள் மற்றொரு பரபரப்பான போட்டியை எதிர்பார்க்கின்றனர். அந்த ஆட்டத்தில் கேப்பிட்டல்ஸ் அணி, நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது.
எங்கு நடைபெறுகிறது:
ஆறு அணிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் 34 போட்டிகள் நடைபெறும். துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியம் 15 போட்டிகளையும், அபு தாபியின் ஸயீத் கிரிக்கெட் ஸ்டேடியம் 11 போட்டிகளையும், ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் 8 போட்டிகளையும் நடத்தும்.
தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு, சீசன் 3-ல் முதல் முறையாக பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்ற ஷார்ஜா வாரியர்ஸ், அபு தாபி நைட் ரைடர்ஸை எதிர்கொள்ளும்
ILT20 கோப்பையை முதல் முறையாக வென்ற கல்ஃப் ஜெயன்ட்ஸ், சீசன் 4-ல் தனது பயணத்தை, முன்னாள் சாம்பியனான எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிராக டிசம்பர் 4, வியாழக்கிழமை துபாயில் மோதும்.
முக்கிய ஆட்டங்கள்:
30 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் முதல் சுற்றில் இரண்டு முறை மோதும்.
புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ILT20 சீசன் 4 பிளேஆஃப்களுக்கு முன்னேறும்.புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், டிசம்பர் 30, செவ்வாய்க்கிழமை அபு தாபியில் விளையாடும்.
இதையும் படிங்க: ஐசிசி தரவரிசை.. 39 வயதில் முதலிடம் பிடித்து சாதித்த ஜிம்பாப்வே வீரர் ராசா.. அதிரடியாக மாறிய பட்டியல்
எலிமினேட்டர் போட்டி ஜனவரி 1 அன்று துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறும். குவாலிஃபையர் 2 ஆட்டம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் .இறுதிப் போட்டி ஜனவரி 4ஆம் தேதி துபாயில் முடிவடையும். இந்த தொடரில் டபுள் ட்டர் போட்டிகள் மட்டும் உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.






