ஐசிசி தரவரிசை.. 39 வயதில் முதலிடம் பிடித்து சாதித்த ஜிம்பாப்வே வீரர் ராசா.. அதிரடியாக மாறிய பட்டியல்

0
114

ஐசிசி ஒருநாள் போட்டி ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜிம்பாப்வேயின் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஹராரேயில் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
39 வயதான ராசா, இந்தத் தொடரில் 92 மற்றும் 59* ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனால் ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் முகமது நபியை பின்னுக்கு தள்ளி, ராசா முதலிடம் பிடிக்க, அவர்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு சரிந்தனர். ராசாவின் முந்தைய சிறந்த தரவரிசை டிசம்பர் 2023-ல் பெற்ற இரண்டாவது இடமாகும்.

- Advertisement -

தரவரிசையில் மாற்றம்:

இதே போன்று, ராசாவின் 151 ரன்கள் எடுத்தன் மூலம், அவரை பேட்டிங் தரவரிசையில் ஒன்பது இடங்கள் உயர்த்தி 22வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்க, 198 ரன்களுடன் தொடரின் அதிக ரன்கள் எடுத்து, தொடரின் சிறந்த வீரர் விருது பெற்று, ஏழு இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்தார். இலங்கையின் ஜனித் லியனேஜ் 13 இடங்கள் உயர்ந்து 29வது இடம் மற்றும் ஜிம்பாப்வேயின் ஷான் வில்லியம்ஸ் மூன்று இடங்கள் உயர்ந்து 47வது இடம் பிடித்துள்ளார்.

ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன் ஜார்ஜ் முன்சி, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2-ல் கனடாவுக்கு எதிராக 84 ரன்கள் எடுத்து மூன்று இடங்கள் உயர்ந்து 34வது இடத்தைப் பிடித்தார். தென்னாப்பிரிக்காவின் டோனி டி ஸோர்ஸி 67வது இடத்திலிருந்து 64வது இடத்திற்கு முன்னேறினார். ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ், இலங்கையின் மஹீஷ் தீக்ஷனாவை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்தார்.

- Advertisement -

மற்ற பட்டியல் விவரம்:

லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4/22 என்ற பந்துவீச்சு மூலம் முதல் இடத்தைப் பிடித்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆறு இடங்கள் உயர்ந்து 19வது இடமும், லுங்கி நிகிடி ஐந்து இடங்கள் உயர்ந்து 23வது இடத்தில் இணைந்தனர். அசித பெர்னாண்டோ ஆறு இடங்கள் முன்னேறி 31வது இடத்தையும், ஹராரேயில் முதல் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த தில்ஷான் மதுஷங்க, 60வது இடத்திலிருந்து 52வது இடத்திற்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: மோதலில் ரதி செஞ்சது தப்பா இருக்கலாம்.. ஆனா நிதீஷ் ராணா செஞ்சதுல மரியாதை அதிகமாயிடுச்சு – அஸ்வின் பேச்சு

ஐசிசி ஆண்கள் டி20 வீரர் தரவரிசையில், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இப்ராகிம் ஸத்ரான் மற்றும் செடிகுல்லா அட்டால், ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு தொடர் போட்டியில் 65 மற்றும் 64 ரன்கள் எடுத்து, பெரிய முன்னேற்றம் கண்டுள்ளனர். ஸத்ரான் 12 இடங்கள் உயர்ந்து 20வது இடத்தையும், அட்டால் 346 இடங்கள் பாய்ந்து 127வது இடத்தையும் பிடித்தார்.பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹசன் நவாஸ் இரண்டு இடங்கள் உயர்ந்து 31வது இடத்தை பிடித்தார்.

- Advertisement -