“சத்தியமா சொல்றேன்.. இது மட்டும் நடந்தா இந்தியாவுக்குதான் உலக கோப்பை!” – தினேஷ் கார்த்திக் உறுதியான பேச்சு!

0
2484
DK

நாளை நடப்பு உலகக்கோப்பையில் மிக முக்கியமான அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் சந்தித்துக் கொள்கின்றன.

போட்டி நடைபெறும் மும்பை ஆடுகளத்தைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால், பகலில் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது பந்தில் பெரிய அளவில் எந்த அசைவுகளும் இருக்காது.

- Advertisement -

அதே சமயத்தில் தேவையான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆடுகளத்தில் இருக்கும். மைதானம் சிறியது என்பதால் ரன்கள் நிறைய வரும். மேலும் குல்தீப் மாதிரியான மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு செம்மண் ஆடுகளம் கைக்கொடுக்கும்.

இரவில் புதிய பந்தில் மின்விளக்குகளின் கீழ் பந்தின் அசைவு அதிகமாக இருக்கும். முதல் 20 ஓவர் களை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் கவனித்து விளையாடுவது முக்கியமானது.

இதனால் மும்பையை பொறுத்தவரை டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது எந்த அணிக்கும் மிகவும் சாதகமான ஒன்று. இரண்டாவது பேட்டிங் செய்தால், குறைந்தபட்சம் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டை கொடுக்காமல் பாதுகாப்பாக விளையாட வேண்டும். பிறகு பனிப்பொழிவு வரும் பொழுது அதிரடியாக விளையாடிக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த நிலையில் இரு அணிகளின் பலத்தை எடுத்துக் கொண்டால் இந்திய அணியே முன்னணியில் இருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு சமீப காலத்தில் நாக் அவுட் போட்டிகளில் எந்த அதிர்ஷ்டமும் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதுதான் இந்திய அணியை மனதளவில் பயமுறுத்தும் விஷயமாக இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு வருவது ஆஸ்திரேலியா இல்லை சவுத் ஆப்பிரிக்கா யாராக இருந்தாலும் இந்திய அணி உலகக்கோப்பையையை வெல்லும். இந்திய அணிக்கு பெரிய பிரச்சனை அரையிறுதிதான்.

இது ஒரு பெரிய ஆட்டம். மும்பையில் போட்டி நடைபெறுவதால். டீம் இந்தியா முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய டோட்டலை கொண்டு வர வேண்டும். அவர்களால் பந்து வீசி அதைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன். ஏனென்றால் இந்திய அணியின் பந்துவீச்சு இதுவரையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சிறப்பாக இருந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

இந்திய அணிக்கு 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இதே மும்பை மைதானத்தில்தான் வெற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேர்மறையான விஷயத்தை எடுத்துக்கொண்டு இந்திய அணி விளையாட வேண்டும் என்று பல இந்திய முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள்!