இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வெற்றி இங்கிலாந்து அணியை மட்டும் இல்லாமல் இங்கிலாந்து மக்களையும் உற்சாகத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது.
அவர்கள் இந்த சுற்றுப் பயணத்திற்கு வரும் பொழுது ஒரு போட்டியை கூட வெல்ல மாட்டார்கள் என்று அந்த நாட்டிலேயே நினைத்தார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு இங்கிலாந்தின் செயல்பாடு சமீபத்தில் டெஸ்ட் தொடரில் இந்தியாவில் அமைந்திருக்கிறது.
மேலும் இந்திய அணியின் உலக தரமான மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை தாண்டி வெற்றி பெறுவது மிகவும் கடினம். மேலும் இந்தியாவில் இந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இதனால் பேட்டிங் நீளமும் அதிகரிக்கும்.
இப்படியான காரணங்களால் இங்கிலாந்து தரப்பிற்கு பெரிய நம்பிக்கைகள் ஏதும் கிடையாது. அவர்கள் ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்கின்ற அளவில்தான் விளையாடினார்கள். ஆனால் அவர்களின் முயற்சிக்கு சிறப்பான பலன் கிடைத்திருக்கிறது.
இங்கிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் பெரிய அனுபவம் இல்லாத இடது கை சுழற் பந்துவீச்சாளரான டாம் ஹார்ட்லி மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார். மிக முக்கியமாக அவருக்கு இந்த போட்டிதான் அறிமுக போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் இந்தத் தொடர் குறித்து பேசும் பொழுது ” ஒரு சுழல் பந்துவீச்சாளராக உங்களை பேட்ஸ்மேன்கள் பின் தொடர்வார்கள். அப்படி பின்தொடர்வதை நான் பெரிதும் விரும்புகிறேன். இந்த நிலையில் நான் சீக்கிரத்தில் வேறொரு மனநிலைக்கு செல்ல வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் தன் சந்திக்கும் பந்து ஒன்றை மோசமான பந்து இல்லை என்று நினைக்கும் பொழுது, நாம் மேற்கொண்டு அவர்களை விளையாட வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : “5-0 இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்ய போகிறோம்.. உலக கோப்பையை விட பெரிசு” – இங்கிலாந்து பனேசர் பேச்சு
நீங்கள் முதலில் பந்து வீச ஓடும் பொழுது கொஞ்சம் வேகமாக ஓடுகிறீர்கள். அதற்குப் பிறகு பொறுமையாக கொஞ்சம் வேகத்தை குறைப்பதற்கு முடிவு செய்கிறீர்கள். நான் இப்படி பந்து வீச வேகமாக ஓடிய பொழுது என் செயல்பாடு குறைவானது. நான் ஓட்டத்தை கொஞ்சம் மெதுவாக்கி நிதானமானேன். எனக்கு அதுதான் வேலை செய்தது.
நான் இங்கே வந்து ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு இந்த தொடரில் பெரிய ரோல் இருக்கலாம். நான் அதற்கு தயாராக இருக்கிறேன்” எனக்கு இன்னும் வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.