யாருடைய பந்திலும் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பேன் – ஸ்டீவன் ஸ்மித் சவால்!

0
129
Steven Smith

உலக கிரிக்கெட்டில் தற்காலத்தில் மிகச் சிறந்த வீரர்களில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட் உடன் அவர் களம் இறங்கும் பொழுது, எதிரணி வீரர்கள் மற்றும் எதிரணி ரசிகர்கள் நம்பிக்கையற்ற நிலையற்ற தன்மைக்கு தானாக போய் விடுவார்கள். அந்த அளவிற்கு அவர் ஒரு வித்தியாசமான தற்காப்பு ஆட்டத்தை விளையாடி வெறுப்பேற்ற கூடியவர். இதனூடாகவே ரன்களையும் கொண்டு வரக் கூடியவர். இப்படியான ஒரு கலவையால் அவர் களத்தில் நிற்பதை எதிர் அணி வீரர்களும் எதிரணி ரசிகர்களும் துளிகூட விரும்பமாட்டார்கள்!

மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடைசியில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் வெற்றிக்கான வெறி இவரை வீழ்த்தி விட்டது என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவிற்கு டெஸ்ட் தொடர் விளையாடச் என்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் பந்தை உப்புக் காகிதம் வைத்து தேய்த்து மோசடி செய்து சிக்கிக்கொண்டது. இந்த மோசடிக்கு கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு வருடம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கறையாக அமைந்ததோடு, முக்கியமான காலகட்டத்தில் ஒரு வருடம் விளையாட முடியாமலும் செய்துவிட்டது.

ஆனாலும் இதற்கு பிறகு திரும்பவும் களம் கண்ட இவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஒரு மிகப்பெரிய விளையாடி தொடரை சமநிலைக்குக் கொண்டு வந்து அசத்தினார். அதற்கு அடுத்து இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய பொழுது அடுத்தடுத்து 60+ பந்துகளில் இரண்டு சதங்கள் அடித்து மிரட்டினார்.

இப்படி எல்லாம் இவர் இருந்தும் கூட நவீன கிரிக்கெட் ஆன டி20 கிரிக்கெட்டில் இவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. நடந்துமுடிந்த டி20 உலக கோப்பையில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 3 ஆட்டங்களில் 91 தான். ஆனால் தற்போது120க்கு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. மொத்தமாக டி20 போட்டிகளில் இவரது சராசரி இருபத்தி ஏழு. ஸ்ட்ரைக் ரேட் 125.

- Advertisement -

இந்த நிலையில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை என் மனதில் வைத்து ஸ்டீவன் ஸ்மித் தயாராகி வருகிறார். இதுகுறித்து அவர் பேசும்பொழுது ” நான் நன்றாக டி20 போட்டியில் விளையாடும் பொழுது நான் ஆஸ்திரேலிய டி20 உலக கோப்பையில் இருப்பதாக உணர்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியா டி20 அணியில் எனக்கு வழங்கப்பட்ட மிஸ்டர் பிக்ஸ் இட் என்ற கதாபாத்திரம் தற்போது எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இனி நான் எனது இயல்பான கிரிக்கெட்டை விளையாடுவேன். யாருடைய பதிலும் முதல் பந்தில் வேண்டுமானாலும் சித்தர் அடிப்பேன் ” என்று கூறியிருக்கிறார்!