INDvsAUS.. நாளை இந்திய பிளேயிங் லெவன்.. உறுதியான 2 மாற்றங்கள்.. துணை கேப்டன் மாற்றம்!

0
14511
ICT

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நாளை ராய்ப்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டை இந்தியா ஒன்றை ஆஸ்திரேலியா வென்று இருக்கிறது. மேலும் எல்லா போட்டிகளிலும் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். எனவே டாஸ் என்றால் முதலில் பந்து வீசுவது முக்கியம்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மகேஷ் குமார் தன்னுடைய திருமணத்தின் காரணமாக தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். இவருடைய இடத்தில் தீபக் சகர் வந்திருக்கிறார்.

மேலும் இந்த தொடரில் சூரியகுமார் கேப்டனாக இருக்க துணை கேப்டனாக ருதுராஜ் இருந்து வருகிறார். தற்பொழுது நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்புகிறார்.

இந்த நிலையில் நான்காவது போட்டிக்கு இந்திய அணியில் என்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பது குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. குறைந்தபட்சம் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் தீபக் சகர் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த மூன்று போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் விளையாடும் ஜெய்ஸ்வால் ருத்ராஜ் மற்றும் இசான் கிஷான் மூவரும் சிறப்பாக விளையாடி இருக்கின்ற காரணத்தினால் கட்டாயம் இடம் பெறுவார்கள். இதேபோல் கேப்டன் சூரியகுமார் ரிங்கு சிங் நீக்கப்பட வாய்ப்பே கிடையாது. அதேபோல் சுழற் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் கட்டாயம் இருப்பார். நான்காவது போட்டியை வென்று தொடரை வென்றால் ஐந்தாவது போட்டியில் வேறு சிலருக்கு வாய்ப்பு தரப்படலாம்.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் திலக் வர்மா இடத்திலும், பிரசித் கிருஷ்ணா இடத்தில் தீபக் சகரும் இடம் பெறலாம் என்று தகவல்கள் கூறுகிறது. இந்த இரண்டு மாற்றங்களும் கட்டாயம் இருக்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ருத்ராஜ், இசான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், அக்சர் படேல், தீபக் சகர், ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான் மற்றும் அர்ஸ்தீப் சிங்.