ஆரஞ்சு தொப்பியை வென்றால்.. ஐபிஎல் கோப்பையை வென்று விட முடியாது – அம்பதி ராயுடு மீண்டும் விமர்சனம்

0
147
Ambati

நேற்றுடன் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த 17 வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரை ஹைதராபாத் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மோதி கொல்கத்தா அணி வென்றது. இந்த நிலையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பையை வெல்வது ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆகாது என அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

இந்த முறை ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா ஹைதராபாத் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் வந்தன. இதில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை வென்றால் ப்ளே ஆப் வாய்ப்பு என்கின்ற நிலையில் இருந்து வென்று வந்தது.

- Advertisement -

குறிப்பிட்ட இந்த போட்டியில் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிறைய சர்ச்சைகள் ஆர்சிபி சம்பந்தமாக இருந்தது. இதற்கு நிறைய எதிர்வினைகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இப்படியான நிலையில் தான் சிஎஸ்கே அணியின் அம்பதி ராயுடு நேரடியாகவே ஆர்சிபி அணி குறித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

மேலும் தான் ஆர்சிபி அணிகளின் ரசிகர்களுக்காக வருத்தப்படுவதாகவும், அந்த அணியில் இருந்து சுயநலத்திற்காக சிறந்த வீரர்களை அந்த அணியின் தலைவர்களும் அணி நிர்வாகமும் கழட்டி விடப்பட்டது தொடர்பாக ரசிகர்கள் யோசிக்க வேண்டும் என்றும், இப்படி செய்தால் வருகின்ற மெகா ஏலத்திலாவது ஒரு நல்ல அணியை உருவாக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோற்று ஆர்சிபி அணி வெளியேறியது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 15 போட்டிகளில் விராட் கோலி 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் செஞ்ச இந்த எல்லாத்துக்குமே பெருமைதான் படறேன்.. 2025லும் ஆரஞ்சு தொப்பி தொடரும் – விராட் கோலி பேட்டி

தற்போது கேகேஆர் அணியை அம்பதி ராயுடு வாழ்த்தும் பொழுது “நரைன், ரசல் மற்றும் ஸ்டார்க் போன்ற வீரர்களுக்காக கேகேஆர் அணி நிற்பதற்கும், இந்த வீரர்கள் கேகேஆர் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ததற்காகவும், அந்த அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இப்படித்தான் ஒரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்கிறது. பல ஆண்டுகளாக இதை பார்த்து வருகிறோம். ஆரஞ்சு தொப்பியை வெல்வதால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது. உங்களிடம் 300 ரன்களுக்கும் மேலான பங்களிப்புகள் எல்லா வீரர்களிடமும் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.