குஜராத்தை ஜெயிக்க விரும்பினால் ரஷித் கானை இப்படி விளையாடுங்க; இல்லனா கஷ்டம்- பிராட் ஹாக் விளக்கம்!

0
103
Braod Hogg

இன்றைய நவீன டி20 கிரிக்கெட் யுகத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்களில் முக்கியமானவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ரஷீத் கான்!

இவரது பந்தை பேட்ஸ்மேன்கள் கணிப்பது அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. மேலும் இவரது வேகமான கூக்ளியை ஆடி ரன்கள் கொண்டு வருவது மிகவும் கடினம்.

- Advertisement -

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக கரீபியன் வீரர் டிவேன் பிராவோ 545 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். வெறும் 345 போட்டிகளில் 466 இக்கட்டுகளை கைப்பற்றி ரசித் கான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த புள்ளி விபரமே இவர் டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு ஆபத்தான பந்துவீச்சாளர் என்பதை புரிய வைக்கும்.

2017 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நான்கு கோடிக்கு உள்ளே வந்த இவர் அடுத்த ஆண்டு 9 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். இதற்கு அடுத்து கடந்த ஆண்டு அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனையால் இவர் வெளியேறி, தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பளத்தில் விளையாடி வருகிறார்.

தற்போதைய சீசன் வரை ஒட்டுமொத்தமாக ஏழு ஐபிஎல் சீசன்களில் 94 போட்டிகளில் 117 விக்கெட்டுகளை 20.43 சராசரியில் வீழ்த்தி இருக்கிறார். பந்துவீச்சு எக்கனமி வெறும் 6.39 என்பதுதான் இவரிடம் மிகச் சிறப்பான விஷயம்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தற்பொழுது சிறப்பாக செயல்பட்டு வரும் இவரது பந்துவீச்சை எப்படி சமாளிப்பது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சைனா மேன் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
” வெளியே உள்ள அணிகளுக்கு இந்த முறை குஜராத் அணியை வீழ்த்தும் வாய்ப்பு இருந்தால், அவர்கள் பவர் பிளேவில் தாக்கி விளையாடி, ஹர்திக் பாண்டியாவை பவர் பிளேவில் ஒன்று இரண்டு ஓவர்களுக்கு ரஷீத் கானை கொண்டு வர வைக்க வேண்டும். ஏனென்றால் 7 முதல் 15 ஓவர்களில் அவர் மிகவும் சிக்கனமானவர். அந்த நடு ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு விக்கட்டையும் வீழ்த்த கூடியவர். எனவே அவரை முன்கூட்டியே கொண்டு வர பார்க்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அவர் வேகமான துல்லியமான சுழற்பந்துவீச்சாளர். அவர் நிறைய டிரிப்ட் மற்றும் பந்தை இருபுறமும் திருப்பும் முறையைப் பெற்றுள்ளார். வேகம் காரணமாக அவர் கொஞ்சமாக திருப்பினால் போதும். இதனால் பேட்ஸ்மேன்கள் மனதில் ஒரு சிறிய சந்தேகத்தை உருவாக்குகிறார். எனவே அவர்கள் கிரீசில் இருந்து விளையாடுகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!

ரஷீத் கானை எப்படி விளையாட வேண்டும் என்று கூறியுள்ள அவர்
” நீங்கள் பேக் புட்டில் அவரை விளையாட விரும்பினால், புல் அண்ட் கட் ஷாட் விளையாட நினைத்தால் அது மிகவும் சிரமமான ஒன்று. ஏனென்றால் அவர் பந்தை வேகமாக ஸ்டம்ப் நோக்கி மட்டுமே வீசுகிறார். பந்து டாப் ஆப் த ஸ்டெம்சை தாக்குமாறு வீசுகிறார். எனவே இப்படியான ஷாட்களை அவரது பந்துவீச்சில் விளையாடுவது கடினமானது. அவரது பந்தில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கின்ற காரணத்தால் ஸ்வீப் ஷாட் விளையாடுவது நல்லது!” என்று தெரிவித்திருக்கிறார்!