அமெரிக்காவில் தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 உலக கோப்பை காண பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
டி20 வரலாற்றில் இல்லாத அளவு டி20 உலக கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 20.63 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. உலகக்கோப்பைக்காண மொத்த பரிசுத்தொகையாக 11.25 அமெரிக்க மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 93.50 கோடி ரூபாயாக பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த இரண்டு நாடுகளையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
இதில் இதுவரை இல்லாத அளவு உலகக்கோப்பையை கைப்பற்றும் அணிக்கு அதிக பரிசுத்தொகையை இந்த முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பைக்காண மொத்த பரிசுத்தொகையாக 93.50 கோடி ரூபாயை ஐசிசி ஒதுக்கியுள்ளது. இதில் சாம்பியன் பட்டம் பெறும் அணி 2.45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 20.63 கோடி பரிசாக பெறுகிறது.
இதில் இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணி குறைந்தபட்சம் 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 10.36 கோடி பரிசுத் தொகையாக பெறுகிறார்கள். அதேநேரம் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறும் இரண்டு அணிகள் 7,87,500 டாலர்களுடன் வெளியேறுவார்கள். இது 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மொத்த பரிசுத்தொகையே 5.6 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
அதில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு 1.6 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. தற்போது வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை இதைவிட ஒரு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றில் இருந்து வெளியேறும் அணிகள் 3,82,500 அமெரிக்க டாலர்களுடன் வெளியேறுகிறது. இதில் 9,10,11,12 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2,47,500 அமெரிக்க டாலர்களை பெறுகின்றன.
இதையும் படிங்க:உலககோப்பையை ஜெயிக்கிறது மேட்டரே இல்ல.. இந்திய அணியை ஜெயிக்கணும் – முகமது ரிஸ்வான் பேச்சு
மற்ற பங்கேற்கும் அணிகளான 13வது இடம் முதல் 20 வது இடம் வரை பிடிக்கும் அணிகள் 2,25,500 டாலர்களை பெறுகிறார்கள். அதேசமயம் ஒவ்வொரு அணியும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை தவிர்த்து வென்ற போட்டிகளுக்கு 31,154 அமெரிக்க டாலர்களை கூடுதலாக பெறுகிறது. டி20 உலக கோப்பை மொத்தமாக 28 நாட்களில் 55 போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியை வருகிற ஐந்தாம் தேதி அயர்லாந்து அணியுடன் மோத உள்ளது.






