இத கூட பண்ண முடியலனா எப்படி இந்தியா கூட ஜெயிக்க போறிங்க?.. No.1 பாகிஸ்தான் அணியை சாடிய கம்ரன் அக்மல்!

0
2446
Akmal

இந்த முறை நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகளும், ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக, இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின!

இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, அபார வேகப்பந்துவீச்சின் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 59 ரன்களுக்கு சுருட்டி, 142 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி, முதல் ஆட்டத்தில் குறைந்த ஸ்கோருக்கு சுருண்டதற்கு, பாகிஸ்தான் அணிக்கு பதிலடி தந்து 300 ரன்கள் குவித்தது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி இறுதியில் பரபரப்பான கட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் கடைசி நேரத்தில் செய்த ஒரு ஓவர் தவறால் போட்டியை வெல்ல முடியாமல் தோற்றது.

மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 268 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 60 மற்றும் 69 ரன்கள் எடுத்தனர். இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களைத் தாண்டி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என அபாரமாக கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி இந்த தொடரை முழுவதுமாக வென்று இருந்தாலும் கூட, பாகிஸ்தான் அணியின் பேட்டிங் செயல்பாடு கவலை அளிப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“மாடர்ன் கிரிக்கெட்டில் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பாசிட்டிவாக விளையாட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இந்த அணிக்கு எதிராக 300 ரன்கள் எடுக்க முடியாவிட்டால், ஆசியக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக எங்களால் இதைச் செய்ய முடியுமா? இது மிகவும் கடினமாக உள்ளது.

இந்தத் தொடர் சிறந்த பயிற்சி வாய்ப்பாக அமைந்தது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்புகளில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை காட்டி பெரிய ஸ்கோர் எடுக்க முயற்சி செய்திருக்க வேண்டும்.

ஆமாம் நீங்கள் இரண்டாவது போட்டியில் 300 ரன்கள் எடுத்தீர்கள். ஆனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வரிசை பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் லோயர் ஆர்டரில் வரக்கூடிய பேட்ஸ்மேன்கள்தான் ஆட்டத்தை முடித்தார்கள். இது பாகிஸ்தான் அணிக்கு நல்ல அறிகுறி கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!