“சஞ்சு சாம்சனை பற்றி கேட்டால்.. என்கிட்ட நிச்சயமா பதில் இல்லங்க” – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

0
121
Sanju

தற்பொழுது டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடர் நிற்கிறது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் உலகக்கிரிக்கெட் டி20 திருவிழா ஆரம்பித்து விடும்.

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டி20 கிரிக்கெட் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு அடுத்து உடனே டி20 உலகக்கோப்பை தொடர் வருகின்ற காரணத்தினால், கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டையே பார்ப்பார்கள்.

- Advertisement -

தற்பொழுது இந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராவது இந்திய அணிக்கு இரண்டு விதமான பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஒன்று ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இருவரும் ஒரே அணியில் இருக்க வேண்டுமா? என்பது.

இன்னொன்று, விக்கெட் கீப்பர்கள் யார் என்பது? இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேவை என்கின்ற நிலையில், இன்னும் ஒரு விக்கெட் கீப்பரின் இடம் கூட உறுதி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சிவம் துபேவின் சக்தி மிக சத்தமாக பேசுகிறது. அவர் மூன்றாவது போட்டியில் சற்று முன்னதாகவே அனுப்பப்பட்டதாக நான் உணர்கிறேன். அப்பொழுது சஞ்சு இல்லை ரிங்கு யாராவது வந்திருக்க வேண்டும். சிவம் துபே இன்னிங்ஸை நகர்த்தக் கூடியவர் கிடையாது. அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். யுவராஜ் சிங் போல அவர் ஆர்டரில் கீழே வர வேண்டும்.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளில் அவர் சிக்ஸர் அடித்த விதத்தில் அவருடைய பலம் தெரிந்தது. சிலர் ஹர்திக் விட்டுவிட்டு இவரை அணியில் தேர்வு செய்ய சொல்கிறார்கள். ஆனால் நான் இருவரையுமே தேர்வு செய்ய சொல்கிறேன். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்குப் பின்பாக சிவம் துபே நிச்சயம் போட்டியாளராக மாறி இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால், போட்டி இன்னும் பலமாக மாறும்.

எங்கள் அணியின் விக்கெட் கீப்பர்கள் யார் என்கின்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் ஜிதேஷ் சர்மா விளையாடினார். பிறகு சஞ்சு சாம்சன் ஒரு போட்டியில் விளையாடினார். முதல் போட்டியில் ஜிதேஷ் சர்மா நன்றாக விளையாடினார். அடுத்த போட்டியில் அவர் ரன் எடுக்கவில்லை. அதேபோல் மூன்றாவது போட்டிக்கு வந்த சஞ்சு சாம்சன் ரன் எடுக்கவில்லை.

விக்கெட் கீப்பர்களாக யார் போவார்கள் என்று கேட்டால், தெரியவில்லை என்றுதான் சொல்வேன். ஜிதேஷ் தனது இடத்தை உறுதிப்படுத்தவில்லை. சஞ்சு கிடைத்த ஒரு வாய்ப்பை வீணடித்தார். இஷான் கிஷானால் ஒரு பகுதியாக அணியில் இருக்க முடியவில்லை. இவர்கள் கேஎல்.ராகுலையும் தேர்வு செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.