இந்திய கிரிக்கெட்டில் இதுவரை கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி என பேட்ஸ்மேன்கள் சூப்பர் ஸ்டார்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் எல்லோரும் வலதுகை பேட்ஸ்மேன்கள். தற்போது ஜெய்ஸ்வால் மூலமாக இடதுகை பேட்ஸ்மேன் ஒருவர் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக உயரம் வாய்ப்புஅமைந்திருக்கிறது. இன்று இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 ரன்கள் எடுத்தால் 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சாதனைக்கு ஜெய்ஸ்வால் சொந்தக்காரர் ஆவார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. இதில் இளம் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
தான் களம் இறங்கிய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே 150 ரன்கள் தாண்டி பெரிய சதம் அடித்து அசத்தினார். மேலும் டி20 வடிவத்தில் கிடைத்த வாய்ப்பிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சதமும் டி20 வடிவத்தில் அடித்திருக்கிறார். இன்னும் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்த போதிலும் கூட அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு அமையவில்லை. இருந்த போதிலும் கூட அதற்கடுத்து ஜிம்பாப்வே டி20 தொடரில் 141 ரன்கள் எடுத்து இந்திய அணியின் தரப்பில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக வந்தார்.
தற்போது ஜெய்ஷ்வால் இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் சேர்த்து 993 ரன்கள் குவித்திருக்கிறார். அவர் இன்னும் ஏழு ரன்கள் எடுப்பதன் மூலமாக, 2024 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் பதிவு செய்த முதல் வீரர் என்கின்ற சாதனையை படைப்பார். கடந்த ஆண்டு அறிமுகமாகி இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இப்படியானதொரு சாதனையை படைத்தது மிகச் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் இலங்கையின் குசால் மெண்டிஸ் 878 ரன்கள் எடுத்திருக்கிறார்.
நான்இதையும் படிங்க : நான் கேப்டனா இருக்க விரும்பல.. என்னோட பிளான் இதுதான்.. நான் அப்ப சொன்னது நடந்தது – சூரியகுமார் யாதவ் விருப்பம்
ஜெய்ஸ்வாலுக்கு ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் இல்லை டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும், இந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ஆயிரம் ரன்னை எப்பொழுது அடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஜெய்ஸ்வாலுக்கு கதவுகள் திறக்கலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.